அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில்.. இளையராஜாவுக்கு கவுரவம்! பத்மபாணி விருது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) 'பத்மபாணி விருது' வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாட்டாளர்கள் இதை அறிவித்தனர்.

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மும்பை சத்ரபதி சம்பாஜிநகரில் இவ்விழா நடைபெறுகிறது. தொடக்க நாளான ஜனவரி 28 அன்று, தேசிய, சர்வதேச கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் இளையராஜா கௌரவிக்கப்படுவார்.

Ilaiyaraaja AIFF

திரை விமர்சகர் லத்திகா பட்கோன்கர் (தலைவர்), திரைப்பட தயாரிப்பாளர்களான அசுதோஷ் கோவாரிக்கர், சுனில் சுக்தங்கர், சந்திரகாந்த் குல்கர்னி அடங்கிய குழு இளையராஜாவை விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. பத்மபானி நினைவுப் பரிசும், கௌரவப் பத்திரமும், ₹2 லட்சம் ரொக்கப் பரிசும் அவருக்கு வழங்கப்படும்.

கடந்த 50 ஆண்டுகளாக, இளையராஜா 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் 1,500க்கும் அதிகமான திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி எனப் பல மொழிகளில் அவரது படைப்புகள் இசை ஆர்வலர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 70 திரைப்படங்கள் திரையிடப்படும்.

பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குனர்-எழுத்தாளர் சாய் பராஞ்ச்பே, நடிகர் ஓம் பூரி போன்ற ஆளுமைகளும் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+