மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகுபலி 3.0.. மகளின் வருகையால் கோபம் அடைந்த அஜித் பவார்.. சரத் பவாரின் முதுகில் குத்திய பின்னணி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை ஏமாற்றிவிட்டு அஜித் பவார் பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு பின் நிறைய குடும்ப ரீதியான காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Who is behind Ajit Pawar's revolt ?

    மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை ஏமாற்றிவிட்டு மூத்த தலைவர் அஜித் பவார் பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு பின் நிறைய குடும்ப ரீதியான காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    மகாராஷ்டிராவில் திடீர் என்று கடந்த சனிக்கிழமை அதிகாலை பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.

    இதனால் அவருக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    போராட்ட களமாகும் மகாராஷ்டிரா அரசியல்.. டெல்லி, மும்பையில் வெடித்த போராட்டம்.. காங்கிரஸ் அதிரடி!போராட்ட களமாகும் மகாராஷ்டிரா அரசியல்.. டெல்லி, மும்பையில் வெடித்த போராட்டம்.. காங்கிரஸ் அதிரடி!

    எப்படி இருக்கிறார்

    எப்படி இருக்கிறார்

    அஜித் பவார் மற்றும் சரத் பவாரின் இந்த திடீர் சண்டைக்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது. அஜித் பவார் என்னதான் சரத் பவாரின் அண்ணன் மகனாக இருந்தாலும் கூட சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையில் உறவு சரியாக இல்லை. அஜித் பவார் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பே கட்சியில் கிளர்ச்சி செய்து இருக்கிறார். பாஜக, காங்கிரஸ் உடன் இவர் ஏற்கனவே இணைய முயன்றுள்ளார்.

    கொஞ்சமும் நினைக்கவில்லை

    கொஞ்சமும் நினைக்கவில்லை

    அப்போதெல்லாம் சரத் பவார் இவர் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் இப்போது நடந்தது சரத் பவார் கொஞ்சம் கூட யோசித்து பார்க்காத விஷயம் என்கிறார்கள். அஜித் இப்படி செய்வார் என்று கொஞ்சம் கூட சரத் நினைக்கவில்லை. அஜித் பவார் சரத் பவாரின் முதுகில் குத்திவிட்டார் என்று கூறுகிறார்கள்.

    எப்போது பிரச்சனை

    எப்போது பிரச்சனை

    ஆனால் இந்த பிரச்சனை இப்போது தொடங்கவில்லை. 2009ம் வருடமே இந்த பிரச்சனை தொடங்கிவிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரும் அஜித் பவாரும் மட்டும்தான் முக்கிய பெரிய தலைவர்களாக இருந்தனர். அதன்பின் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவிற்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தார்.

    அரசியலில் இருக்கிறார்

    அரசியலில் இருக்கிறார்

    2009ல் இருந்து சுப்ரியா சுலே அரசியலில் இருக்கிறார். தற்போது இவர் லோக்சபா எம்பியாக உள்ளார். ஒருமுறை கூட அரசியலில் இவர் தோல்வியை சந்தித்தது கிடையாது. அஜித் பவாரின் பல்டி காரணமாக இவர் கட்சிக்குள் முக்கிய நபராக உருவெடுத்து வருகிறார்.

    மதிப்பு இல்லை

    மதிப்பு இல்லை

    2009ல் சுப்ரியாவின் அரசியல் வருகையால் கட்சியில் அஜித் பவாரின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. சரத் பவாருக்கு வயதாகிவிட்டது. மக்களுக்கு அஜித் பவாரை விட சுப்ரியா சுலே மீது நம்பிக்கையும், மதிப்பும் இருக்கிறது. இதனால் அஜித் பவாருக்கு பதிலாக சுப்ரியாவை சரத் பவார் தலைவராக்க திட்டமிட்டுள்ளார்.

    பாகுபலி 3.0

    பாகுபலி 3.0

    கிட்டத்தட்ட பாகுபலி படம் போலத்தான் சுப்ரியாவிற்கும் அஜித் பவாருக்கும் இடையில் அதிகார மோதல் இருந்துள்ளது. அட கட்சியில் மட்டும் இல்லை. இரண்டு பேரின் குடும்பத்திலும் கூட, எல்லோரும் அஜித் பவாரை விட சுப்ரியாவிற்குத்தான் அதிக மதிப்பு அளித்து இருக்கிறதாம். கட்சியில் இவ்வளவு நாள் உழைத்து எல்லாம் வேஸ்ட்டாகிவிட்டது என்று அஜித் பவார் நினைத்து இருக்கிறார்.

    உடைக்க வேண்டும்

    உடைக்க வேண்டும்

    இப்போதே தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்தால்தான் எதிர்காலத்தில் தொண்டர்கள் நம் பக்கம் வருவார்கள். இல்லையென்றால் கட்சி எதிர்காலத்தில் கைவிட்டு போய்விடும். இப்போதே பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார்.

     வலுவான கட்சி

    வலுவான கட்சி

    பாஜக போன்ற வலுவான கட்சியுடன் சேர்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று அஜித் பவார் நினைத்து இருக்கிறார். அதனால்தான் அவர் கடைசி நேரத்தில் பாஜகவுடன் கைகோர்த்தார் என்று கூறுகிறார்கள். அங்கு நடக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கு இதுவும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra: Ajit Pawar's family issue with Supriya Sule is one the reason for his drift against NCP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X