மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம்.. 14 அமைச்சர்கள் பதவியேற்பு.. யாருலாம் பதவியேற்கிறார்கள்?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதில் சிவசேனா மற்றும் பாஜகவை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் அரசியலில் தினம் தினம் ஒரு பரபரப்பு என கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது.

பாஜக-சிவசேனா கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது... தொடர்ந்து தேர்தலுக்கு பின்னர் சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது... என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம்.. ''ஓரிரு நாளில் நடக்குமா?''.. துணை முதல்வர் பட்னாவிஸ் பதில்! மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம்.. ''ஓரிரு நாளில் நடக்குமா?''.. துணை முதல்வர் பட்னாவிஸ் பதில்!

 மராட்டிய அரசியல்

மராட்டிய அரசியல்

தற்போதும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்னாத் ஷிண்டேவே கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்தது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியது. இதனால் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனாவின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. மராட்டியத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவர்கள் 2 பேரும் தான் தற்போது புதிய ஆட்சியில் அமைச்சர் பதவி ஏற்றுள்ளனர்.

 எப்போது அமைச்சரவை விரிவாக்கம்

எப்போது அமைச்சரவை விரிவாக்கம்

ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சியினர் கேலி, கிண்டல் செய்ய தொடங்கினர். 2 பேர் மட்டுமே அமைச்சர் பதவி ஏற்றுவிட்டு மற்றவர்களை நியமிக்காமல் இருந்தது பாஜகவுக்கும் சற்று கஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்னாத் ஷிண்டே அவ்வப்போது டெல்லி சென்று வந்தனர். இருந்த போதிலும் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என நாட்கள் தான் கடந்துகொண்டே போனது.

 எப்போது அமைச்சரவை விரிவாக்கம்

எப்போது அமைச்சரவை விரிவாக்கம்

தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் எப்போதும் நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலையில் டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத நேரத்தில் கூட நடந்துவிடும்" என்று கூறினார். இதனால் ஓரிரு நாளில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று பலராலும் பேசப்பட்டது. இதேபோல் அப்படி அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்பட்சத்தில் யார் யாருக்கு என்ன துறைகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சும் பரவலாக பரவி வந்தது.

 யார் யாருக்கு பதவி

யார் யாருக்கு பதவி

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்று திரும்பிய நிலையி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாளை நடக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 12 பேர் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பாஜனதா சார்பில் சுதீர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.இதேபோல் முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிவசேனா சார்பில், குலாப் ரகுநாத் பாட்டீல், சதா சர்வான்கர், தீபக் வசந்த் கேசர்கர் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர்.

English summary
It has been a month since the government was formed under the leadership of Eknath Shinde in Maharashtra. There are reports that the cabinet will be expanded tomorrow and 14 MLAs from Shiv Sena and BJP will be sworn in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X