மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைத்து சிக்கலுக்கும் ஆளுநர்தான் காரணம்.. உடனே பதவி விலக வேண்டும்.. காங்கிரஸ் கட்சி அதிரடி மூவ்!

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்களுக்கு பொறுப்பேற்று ஆளுநர் பகத் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்களுக்கு பொறுப்பேற்று ஆளுநர் பகத் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது.

    மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பாஜகவிற்கு அங்கு போதுமான பெரும்பான்மை இல்லை.

    இதனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார். இது அங்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிரா.. பாஜக சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமனம்! மகாராஷ்டிரா.. பாஜக சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமனம்!

    யார் காரணம்

    யார் காரணம்

    மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பங்களுக்கு ஆளுநர் பகத் சிங்கின் அவசரமான நடவடிக்கையும் ஒரு காரணம் என்று கூறலாம். பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறதா என்று முறையாக சோதிக்காமல் அவர்தான் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வேகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை விலகிக் கொள்ள பரிந்துரை செய்தார்.

    காங்கிரஸ் புகார்

    காங்கிரஸ் புகார்

    இதனால் எப்போதும் போல இல்லாமல் அவசர அவசரமாக அதிகாலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்காக மத்திய அமைச்சரவையை கூட கூட்டவில்லை. இது தொடர்பாக தற்போது காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா அளித்த பேட்டியில், ஆளுநர் செய்தது தவறு.

    முழு பொறுப்பு

    முழு பொறுப்பு

    அவர்தான் இந்த அரசியல் பிரச்சனைக்கு காரணமாக, அவர் உடனடியாக பதவி விலக, இங்கு நடந்த அரசியல் பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். இது தொடர்பாக நாங்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    அதேபோல் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் இருவரும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் உச்ச நீதிமன்றத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். தேவையில்லாத பொய்களை சொல்லி அவர்கள் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Maharashtra: Congress seeks Governor's resignation in the state, will approach the president soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X