Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. சயோன் கோலிவாடா பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவின் சயோன் கோலிவாடா சட்டசபை தொகுதியில் தாம் 40,000 முதல் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக வேட்பாளரான தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன். சயோன் கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக மற்றொரு தமிழரான கணேஷ்குமார் களம் காண்கிறார்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பெரும் கவனம் பெற்றுள்ள தொகுதி சயோன் கோலிவாடா. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் சயோன் கோலிவாடா தொகுதி பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களாக தமிழர்களே களம் காண்கின்றனர். பாஜக சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற கேப்டன் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கணேஷ்குமார் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார்.

maharashtra assembly election 2024 2024


2009-ம் ஆண்டு சயோன் கோலிவாடா சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதன் தேவர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கணேஷ் அய்யர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வென்றது. கணேஷ் அய்யருக்கு 3,030 வாக்குகளும் தமிழரான ராமநாதன் தேவருக்கு 1,065 வாக்குகளும் கிடைத்தன.

ஆனால் 2014-ம் ஆண்டு முதல் சயோன் கோலிவாடா தொகுதியின் சரித்திரமே தலைகீழானது. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் 40,869 வாக்குகள் பெற்றார். அத்தேர்தலில் 3,738 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரைத் தோற்கடித்தார் தமிழ்ச்செல்வன்.

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சயோன் கோலிவாடா தொகுதி முக்கியத்துவம் பெற்றது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மீண்டும் தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக மற்றொரு தமிழரான கணேஷ்குமார் யாதவ், காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தமிழ்ச்செல்வன் 54,845, கணேஷ்குமார் யாதவ் 40,894 வாக்குகளைப் பெற்றனர்.13,951 வாக்குகள் வித்தியாசத்தில் 2-வது முறையாக வென்று எம்.எல்.ஏ.வானார் கேப்டன் தமிழ்ச்செல்வன்.

தற்போதைய சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜகவின் தமிழ்ச்செல்வனும் காங்கிரஸின் கனேஷ்குமாரும் மோதுகின்றனர். இதனால் சயோன் கோலிவாடா தொகுதி கவனம் பெற்றுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் கேப்டன் தமிழ்ச்செல்வன் கூறுகையில், இத்தொகுதியில் அதிகமான வாக்குகளைப் பெற்று வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் என்னை பிரசாரத்துக்கே நீங்கள் வரவேண்டாம்.. நாங்களே உங்களுக்காக பிரசாரம் செய்கிறோம் என்கின்றனர். இந்த முறை 40,000 முதல் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி விரக்தியில் இருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என பேசுகிறது. பிரதமர் மோடி இந்திய அரசியல் சாசனத்தை நம்புகிறார். அரசியல் சாசனத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+