போராட்ட களமாகும் மகாராஷ்டிரா அரசியல்.. டெல்லி, மும்பையில் வெடித்த போராட்டம்.. காங்கிரஸ் அதிரடி!
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கு எதிராக தற்போது காங்கிரஸ் கட்சி முதல்முறையாக போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கு எதிராக தற்போது காங்கிரஸ் கட்சி முதல்முறையாக போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவிற்கு நவம்பர் 30ம் தேதி ஆளுநர் பகத் சிங் நேரம் கொடுத்தார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நேற்றும், இன்றும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் நாளை இந்த வழக்கில் காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா வழக்கில் நாளை முக்கியமான திருப்பங்கள் நடக்கும், அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் எப்படி
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கு எதிராக தற்போது காங்கிரஸ் கட்சி முதல்முறையாக போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது. இதுவரை மகாராஷ்டிரா பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் தலையிடாமல் இருந்தது. என்சிபி - சிவசேனா மட்டுமே முக்கிய முடிவுகளை எடுத்து வந்தது.

முதல்முறை இப்படி
இதையடுத்து தற்போது முதல்முறையாக காங்கிரஸ் கட்சி களமிறங்கி போராட்டம் செய்து வருகிறது. டெல்லியில், பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிரா ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது. அங்கு ஆளுநர் சட்டத்தை மீறி நடந்து கொண்டார் என்று போராட்டம் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி
அதேபோல் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆளுநருக்கும், பாஜகவிற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பலகைகளுடன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அமளி
காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக ராஜ்ய சபா, லோக்சபாவிலும் குரல் எழுப்பியது. அதேபோல் சிவசேனாவும் லோக்சபாவில் கடுமையான வாதங்களை வைத்தது. இதனால் இரண்டு அவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபா நாளை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications