மும்பையில் அம்பேத்கரின் 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு
மும்பை: மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த 'ராஜ்க்ருஹா' இல்லம் அமைந்துள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இதில் அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து அம்பேத்கர் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அண்ணல் அம்பேத்கரின் இல்லம் சேதப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications