தேனிலவில் ஷாக்.. குதிரையில் ஏறிய புதுமாப்பிள்ளை.. அடுத்த நொடி நடந்த "சம்பவம்".. அலறிய மணப்பெண்!
ஒருகட்டத்தில், தறிகெட்டு ஓடிய குதிரையில் இருந்து இம்தியாஸ் கீழே விழுந்தார். அப்போது குதிரையின் கால்களில் அவர் சிக்கிக் கொண்டார்.
மும்பை: தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை தனது நண்பர்களுடன் குதிரை சவாரி செய்த போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் (23). இவர் தனது கல்லூரி தோழியை கடந்த வாரம்தான் திருமணம் செய்து கொண்டார்.
இதேபோல, காஷிப் இம்தியாஸின் நண்பருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இதையடுத்து, இரண்டு புதுமணத் தம்பதிகளும் தேனிலவுக்கு எங்கேயாவது செல்லலாம் என முடிவெடுத்தனர்.

குதிரை சவாரி
கோவா, சிம்லா உள்ளிட்ட பல பகுதிகளை யோசித்த அவர்கள், இறுதியாக மகாராஷ்ட்ராவில் உள்ள மாதேரன் பகுதிக்கு சென்று தேனிலவை கழிக்க முடிவு செய்தனர். அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் காரிலேயே மாதேரனுக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், அங்கு மிகவும் புகழ்பெற்ற குதிரை சவாரியில் செல்ல ஆசைப்பட்டுள்ளனர்.

கடிவாளத்தை வேகமாக இழுத்தார்
அதன்படி, இரண்டு தம்பதிகளான 4 பேர் தனித்தனியாக குதிரைகளில் ஏறி சவாரி சென்றனர். முதலில் அனைவரின் குதிரைகளும் சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், முகமது இம்தியாஸ் குதிரையின் கடிவாளத்தை வேகமாக இழுத்திருக்கிறார். இதையடுத்து, அவரது குதிரை மட்டும் வேகமாக ஓட தொடங்கியது. ஆனால், இம்தியாஸுக்கோ குதிரையின் வேகத்தை குறைக்க தெரியவில்லை.

தலையில் மிதித்த குதிரை
ஒருகட்டத்தில், தறிகெட்டு ஓடிய குதிரையில் இருந்து இம்தியாஸ் கீழே விழுந்தார். அப்போது குதிரையின் கால்களில் அவர் சிக்கிக் கொண்டார். இதில், குதிரை தனது கால்களை கொண்டு அவரது முகம், தலை, நெஞ்சு ஆகிய இடங்களில் பலமாக மிதித்தது. இதனால் தலையில் இருந்து அவருக்கு ரத்தம் கொட்டி அங்கேயே அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, அவரது நண்பரும், அங்கிருந்தவர்களும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெரும் சோகம்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான ஒரு வாரத்தில் தேனிலவுக்கு மகிழ்ச்சியாக சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. சுற்றுலா செல்பவர்கள் குதிரை சவாரியின் போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலானோர் இதை கடைப்பிடிக்காததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications