மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் பரபரப்பு! நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம்..மும்பை ஏர்போர்டில் பெரும் விபத்து தவிர்ப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானங்களை, விமான நிலையங்களுக்குள்ளே ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த வேண்டும் என்றால் அதற்கு 'புஷ்ப்க் டிரக்' என்ற வாகனம் பயன்படுத்தப்படும்.

இன்று பிற்பகல் மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜாம்நகர் செல்லும் ஏர் இந்தியா விமானம் வழக்கம் போலப் புறப்படத் தயாரானது. ஜாம் நகருக்கு செல்லவிருந்த அந்த ஏர் இந்தியா 647 விமானத்தில் மொத்தம் 85 பயணிகள் இருந்தனர்.

Narrow Escape For 85 On Air India flight as Tow Van catches Fire At Mumbai Airport

அதை ஓடுபாதைக்கு இழுத்துச் செல்ல புஷ்பேக் டிரக் வந்தது. அப்போது திடீரென அந்த புஷ்பேக் டிரக்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீ கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கியது. இதையடுத்து உடனடியாக அருகிலிருந்த விமான நிலைய ஊழியர்களைத் தீயை அணைத்தனர்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த டிரக் விமானத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும்போது தீ பற்றியதால், விமானத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த திடீர் தீ விபத்தில் வேறு வாகனங்கள் எதுவும் சேதமடையவில்லை. அதேபோல விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் விமான நிலைய நடவடிக்கைகளிலும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்

எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் - 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் - 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்

இந்தத் தீவிபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

English summary
Narrow Escape For 85 passengers On Air India flight as Tow Van catches Fire At Mumbai Airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X