"மலேரியா,டெங்கு + சிக்குன்குனியா!" மிரட்டும் கொசு சூறாவளி! அலறி ஓடும் பொதுமக்கள்! நம் நாட்டில் தாங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரொம்பவே வினோதமான ஒரு சூறாவளி ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பருவ மழைக் காலத்தில் பொதுவாகப் புயல்கள் ஏற்படும். அதிலும் காலநிலை மாற்றத்தால் இப்போது புயல்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த புயல் தான் இப்போது அதிகப்படியான மழையை நமக்குத் தருகிறது.

Netizens shocked to see Mosquito tornado swirls over Pune river

அதேநேரம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் புயல் ஏற்படும் போது அவை சூறாவளி போல மாறும். காற்று அதிவேகத்தில் சுற்றுவதே இதற்குக் காரணமாகும். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் நமது நாட்டில் நடந்துள்ளது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக...

தான் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கேசவ்நகர் மற்றும் காரடி என்ற பகுதியில் வசிக்கும் மக்கள், முத்தா ஆற்றின் மீது பறந்த அசாதாரண "கொசு சூறாவளி" பார்த்து வியப்படைந்தனர். இது தொடர்பான வீடியோவை எடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்தனர்.

அதில் பல ஆயிரம் கொசுக்கள் அடர்த்தியான மேகம் போல ஆற்றங்கரைகளுக்கு அருகில் சுழலும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காட்சியைப் பார்க்கும் பலராலும் இதை நம்பவே முடியவில்லை. அப்படியே பார்க்க ஒரு சூறாவளி போல இருக்கிறது. ஆனால், இந்த சூறாவளி முழுக்க முழுக்க கொசுக்களால் ஆனதாக இருக்கிறது.

அதேநேரம் கொசுக்கள் இப்படி சூறாவளி போலச் சுற்றுவது இது முதல் முறை இல்லை.. காடுகள் இருக்கும் பகுதி அருகே உள்ள பகுதிகளில் பொதுவாக இதுபோன்ற கொசு சூறாவளிகள் ஏற்படும். ஆனால் புனே போன்ற கட்டிடங்கள் அதிகம் இருக்கும் நகர்ப்புறங்களில் இது ஏற்பட்டதே அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. சமீப காலமாக அங்கு நிலவிய வானிலை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழலை உருவாக்கியதாகவும் இதுவே இந்த கொசு சூறாவளிக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

குண்டா இருக்கீங்களா.. "கிரீன் டீ" குடிப்பது நல்லது ஓகே.. ஆனா உடல் எடை குறையுமா? பிரச்னை எதாவது வருமா


அதேநேரம் கொசுக்கள் இந்தளவுக்கு இருந்தால் அது மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற கொசு சூறாவளிகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் புனே மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் இவ்வளவு பெரிய கொசு சூறாவளியை அடிக்க எவ்வளவு பெரிய கொசு பேட் தேவைப்படும் என்பதை நினைத்தால் தான் தலை சுற்றுகிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார். போகிற போக்கை பார்த்தால் கொசு நம்மையே சாப்பிட்டுவிம் போல இருக்கே என மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் நெட்டிசன் ஒருவர் இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அந்த நெட்டிசன், "நதிகள் எப்போதும் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.. நதிகளில் எப்போதும் கொசு முட்டைகளை உண்ணும் சிறு உயிரினங்கள் இருக்கும்.. ஆனால் நாம் கழிவு நீர் கொட்டுவது உள்ளிட்ட மோசமான செயல்களைச் செய்யும் போது கொசு முட்டைகள் கட்டுங்கடங்காமல் அதிகரிக்கிறது. கொசு முட்டைகளை உண்ணும் சிறு உயிரினங்களும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதுவே ஆற்றின் மேற்பரப்பு கொசுக்கள் உற்பத்தி கூடமாக மாற காரணமாக இருக்கிறது.இது பார்க்க நம் அனைவருக்கும் ஏதோ ஜாலி வீடியோ போல தோன்றலாம். ஆனால், உண்மையில் இதனால் மிக மோசமான நோய்களும் கூட பரவும் ஆபத்து இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+