யாரு பப்பு? மோடிக்கே “டஃப்” கொடுக்கிறாரே ராகுல் காந்தி.. ஒற்றுமை யாத்திரையில் மாறிய “கெட்அப்”
மும்பை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி தற்போது மகாராஷ்டிராவில் அதை தொடர்ந்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பெரிய தாடியுடன் மகாராஷ்டிரா வீதிகள் வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை உருவாக்க கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி.
2 மாதத்திற்கு முன் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.

தென் மாநிலங்களில் யாத்திரை
தமிழ்நாட்டில் தொடங்கி கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகா
ராகுல் காந்தி கர்நாடகாவில் மேற்கொண்ட நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கர்நாடகாவில் இவர் நடைபயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. ராகுல் காந்தியும் அங்கிருந்தபடியே வாக்கை செலுத்தினார்.

தெலுங்கானா
கர்நாடகா நடைபயணத்தை முடித்துவிட்டு தெலுங்கானா மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி அங்குள்ள பல தரப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். தெலுங்கானாவில் 15 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல் காந்தியுடன் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

மகாராஷ்டிரா
நேற்றுடன் நடைபயணத்தின் 60 வது நாளை நிறைவு செய்த ராகுல் காந்தி, தெலுங்கானா நடைபயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சென்று உள்ளார். நேற்று அங்கு சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

பெரிய தாடி
பயணத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது ராகுல் காந்தி கூடுதல் உற்சாகத்துடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தற்போது ராகுல் காந்தியின் வீடியோக்கள், புகைப்படங்களில் அவர் பெரிய தாடியுடன் காட்சி தருகிறார். வாரிசு என்ற காரணத்தாலும், அவரது முக அமைப்பாலும் பப்பு என்று அவரை எதிர்க்கட்சியின் கேலி செய்து வந்த நிலையில் தோற்றத்திலும், பேச்சிலும், செயல்பாட்டிலும் முதிர்ச்சியை காட்டத் தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

பயண விபரம்
3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு 150 நாட்களில் காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார். 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications