யார் பி டீம்? மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலில்.. பாஜகவை அதிர வைத்த ஓவைசி.. பரபர மூவ்! நடந்தது என்ன?
மும்பை: மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணியின் வேட்பாளரை ஆதரிப்பதாக ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுக்க 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 41 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். ராஜ்ய சபா எம்பி தேர்தலில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து 16 எம்பி பதவிகளுக்கு போட்டி நிலவுகிறது.
அதிலும் மகாராஷ்டிராவில் மிகவும் சுவாரசியமான போட்டி நிலவி வருகிறது. அங்கு மொத்தம் 6 ராஜ்ய எம்பி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள். இதுதான் அங்கு போட்டிக்கு காரணம் ஆகி உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி அங்கு வலுவாக உள்ளது.

என்ன போட்டி
தேசியவாத காங்கிரஸ் சார்பாக பிரபுல் பட்டேல் அங்கு எளிதாக ஒரு எம்பி பதவி பெறுவார். இது போக காங்கிரஸ் சார்பாக அங்கு இம்ரான் ஒரு எம்பி பதவியை பெறுவார். சிவசேனா சார்பாக சஞ்சய் ராவத் இன்னொரு பதவியை பெறுவார். பாஜக சார்பாக பியூஸ் கோயல், அணில் ஆகியோர் தலா ஒரு எம்பி பதவிகளை எளிதாக பெறுவார்கள். எனவே 5 எம்பி போக.. 6வது எம்பியாக மகாராஷ்டிராவில் இருந்து யார் தேர்வாவர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாருக்கு போட்டி?
இதற்கு சிவசேனா சஞ்சய் பவரை களமிறக்கி உள்ளது. பாஜக தனஜெய் மஹாதிக்கை களமிறக்கி உள்ளது. இவர்கள் இடையில்தான் இப்போது போட்டி. அங்கு ஒரு எம்பியை தேர்வு செய்ய 42 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்களில் 3 எம்பிக்கள் தேர்வானது போக 40 எம்எல்ஏக்கள் மீதம் உள்ளனர். ஆனால் என்சிபி நவாப் மாலிக், அணில் தேஷ்முக் சிறையில் இருப்பதால் அவர்கள் வாக்களிக்க முடியாது. இதனால் அவர்கள் இருவரின் வாக்குகள் சிவசேனா கூட்டணிக்கு கிடைக்காது.

சிறையில் எம்எல்ஏக்கள்
எனவே அவர்களுக்கு 38 எம்எல்ஏக்கள் மீதம் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு இரண்டு எம்பிக்கள் தேர்வானது போக 29 எம்எல்ஏக்கள் மீதம் உள்ளனர். இந்த நிலையில் பார்முலா படி.. சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் ஒரு எம்பியை தேர்வு செய்ய 4 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு 13 எம்எல்ஏக்கள் தேவை. அங்கு மற்ற கட்சிகள் என்று பார்த்தால் சிபிஎம் 1 எம்எல்ஏ, ஏஐஎம்ஐஎம் 2 எம்எல்ஏக்கள், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் 1 எம்எல்ஏ உள்ளனர்.

ஓவைசி
இந்த நிலையில்தான் அங்கு ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரானை ஆதரிப்பதாக ஓவைசி அறிவித்து உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள்.. என்சிபி சஞ்சய் பவாரை ஆதரிக்க முடியும். இதனால் அங்கு சஞ்சய் பவார் எம்பி ஆக இன்னும் 2 எம்எல்ஏக்களே தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவைசி பாஜகவை ஆதரிக்காமல் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

ஓவைஸி முடிவு
வகுப்பு போர்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் 2 எம்எல்ஏ உள்ள தொகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்று நிபந்தனை வைத்து அவர் இந்த ஆதரவை கொடுத்துள்ளார். பொதுவாக சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி நிற்கும் போதெல்லாம்.. அந்த கட்சி எதிர்க்கட்சி வாக்குகளை பிரிப்பதாக விமர்சனம் வைக்கப்படும். அதாவது காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல வேண்டிய இஸ்லாமிய வாக்குகளை ஓவைசி பிரிப்பதாக விமர்சனம் வைக்கப்படும்.

பாஜக பி டீம்
இஸ்லாமிய வாக்குகளை ஓவைசி பிரித்து பாஜகவை வெல்ல வைக்கிறார் என்று உத்தர பிரதேச, குஜராத், மத்திய பிரதேச தேர்தல்களில் புகார் வைக்கப்பட்டது. இதனால் அவர் பாஜகவின் பி டீம் என்றும் கூறப்பட்டது. இவர் மீது காங்கிரஸ் தலைவர்கள் பலர் விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்த நிலையில்தான் திடீரென பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்து ஓவைசி காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதாக கூறியுள்ளார். தன் மீது பாஜகவின் பி டீம் என்று வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் ஓவைசி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications