போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஆஜரான ரியா சக்கரவர்த்தி.. விசாரணையில் கூறிய பரபரப்பு தகவல் என்ன?
மும்பை: நான் இதுவரை போதை மருந்தை உட்கொண்டதே இல்லை என நடிகை ரியா சக்கரவர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

ஆராய்ச்சி
ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்களை ஆராய்ந்ததில் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறிதது போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்சிபி) ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

ரியாவின்
ரியாவின் சகோதரர் ஷோயிக் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோரின் வீட்டில் பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு என்சிபி காவலுக்கு நேற்று அனுப்பப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக போதை பொருளை உட்கொண்டது, போதை பொருளை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆஜர்
இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் ஆஜரானார். அவர் ஏதேனும் மருந்துகளை உட்கொள்கிறாரா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். நான் இதுவரை போதை பொருளை உட்கொண்டதே இல்லை என ரியா பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.

காதலிப்பது குற்றம் அல்ல
இதுகுறித்து ரியா செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒருவரை காதலிப்பது குற்றம் அல்ல. காதலுக்காக விளைவுகளை நான் எதிர்கொள்வேன். நிரபராதி என்பதால் நான் முன்ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகவில்லை என்றார். என்சிபி விசாரணையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரியா திருப்திகரமாக பதில் அளிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications