என் மகன் என்ன பாவம் பண்ணான்? கிரிமினல் மாதிரி நடத்துனாங்க.. வேதனையில் பொங்கிய ஷாருக்கான்!
மும்பை : தன் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட போது நாங்கள் மிகப்பெரிய கிரிமினல்கள் போல நடத்தப்பட்டதாகவும், அரக்கர்களை போல சித்தரிக்கப்பட்டோம் என நடிகர் ஷாருக்கான் தன்னிடம் கூறியதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்திய இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

ஆர்யன் கான் வழக்கு
இதனையடுத்து நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. முன்னதாக என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, ஆர்யான் கான் கணிசமான அளவு சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், ஆர்யனுக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் ஒரு வழக்கைத் தயாரித்தார். ஆனால் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை,

வழக்கிலிருந்து விடுதலை
அதாவது ஆர்யன் போதைப் பொருள் வைத்திருந்ததாகவோ, பயன்படுத்தியதாகவோ ஆதரங்களை என்சிபி அதிகாரிகள் சமர்பிக்கப்படவில்லை. இதனையடுத்து ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுகள் மே 28 ஆம் தேதி கைவிடப்பட்டது. ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து ஏற்கனவே 28 நாட்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கில் சிறையில் இருந்தபோது ஆர்யன் கான் தன்னிடம் பேசியவை குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆர்யன் வேதனை
'ஆரியன் கான் வழக்கிலிருந்து பாடங்கள்' என்ற தலைப்பில் என்சிபியின் துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் சிங் ராஜ் செங்கப்பா, ஆர்யன் கான் மற்றும் ஷாருக்கானுடன் அவர் நடத்திய உரையாடல்களை தற்போது வெளி உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆர்யனை திறந்த மனதுடன் வந்திருப்பதாக உறுதியளித்து வசதியாக இருக்க வைக்க முயற்சித்த பிறகு அவர் தன்னிடம் வெளிப்படையாக பேசியதாக அவர் கூறியுள்ளார். அதில், " நீங்கள் என்னை ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனாக சித்தரித்தீர்கள்,

அதிர்ச்சி கேள்வி
நான் போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியளிக்கிறேன் என சொன்னீர்கள், இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானவை இல்லையா? அன்று என்னிடம் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்தனர். நீங்கள் எனக்கு பெரிய தவறு செய்து என் புகழை கெடுத்துவிட்டீர்கள். நான் ஏன் இத்தனை வாரங்கள் சிறையில் இருந்தேன் - நான் அதற்கு தகுதியானவனா?" என வேதனையுடன் கேட்டுள்ளார்.

ஷாருக்கான் உருக்கம்
மேலும் மேலும் தன்னுடன் ஆர்யன் கானின் தந்தையான ஷாருக்கான் பேசிய தகவல்கள் குறித்தும் சஞ்சய் சிங் கூறியுள்ளார். பொதுவாக மற்ற கைதிகளின் பெற்றோர்களை சந்திப்பது போலவே தான் ஷாருக் கானை சந்தித்ததாகவும் அப்போது ஆர்யன் சிறை அறையில் இரவு நேரங்களில் சரியாக கூட தூங்க மாட்டார் என சொன்னதாக கூறியுள்ளார். இதையடுத்தே ஆர்யனுடன் ஷாருக்கான் இரவில் தங்கியதாகவும், தனது மகன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இழிவுபடுத்தபட்டுள்ளார் என கூறினார் . மேலும் தங்களை கிரிமினல்கள் போலவும் இந்த சமுதாயத்தை அழிக்க துடிக்கும் அரக்கர்களை போலவும் சித்தரிக்கப்பட்டதாக கண்ணீர் மல்க ஷாருக்கான் கூறியதாகவும்" சஞ்சீவ்குமார் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications