மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலை புரட்டிப்போட்ட நொடி.. கொட்டும் மழையில் பிரச்சாரம்.. சரத் பவார் கற்றுத்தந்த அரசியல் பாடம்!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்த பிரச்சாரம் ஒன்றுதான் அவருக்கு தற்போது பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra ByElection Results | பாஜகவை அசைத்து பார்த்த சரத் பவார்..தேசியவாத காங்கிரசின் எழுச்சி!

    மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்த பிரச்சாரம் ஒன்றுதான் அந்த கட்சிக்கு தற்போது பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது.

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    அதே சமயம் பெரிய வெற்றியை ருசிக்கும் என்று கருதப்பட்ட பாஜக கூட்டணி 165 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவோ வெறும் 105 இடங்களில்தான் முன்னிலை வகித்து வருகிறது.

    முதல்வர் பதவி வேண்டும்.. காங்.ஐ அணுகும் துஷ்யந்த்.. ஹரியானாவில் இறக்கப்படும் கர்நாடக பார்முலா!முதல்வர் பதவி வேண்டும்.. காங்.ஐ அணுகும் துஷ்யந்த்.. ஹரியானாவில் இறக்கப்படும் கர்நாடக பார்முலா!

    தேசியவாத காங்கிரஸ்

    தேசியவாத காங்கிரஸ்

    லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வரிசையாக பலர் வெளியேறினார்கள். முக்கிய உறுப்பினர்கள் பலர் கட்சிக்குள் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று புகார் கூறி கட்சியை விட்டு வெளியேறினார்கள். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார்.

    சத்தாரா தொகுதி

    சத்தாரா தொகுதி

    தன்னுடைய சத்தாரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் மாரத்தா அரசின் 13வது சத்திரபதியாக உதயன்ராஜே போஸ்லேதான் முடி சூடினார்.

    ஏற்பாடு

    ஏற்பாடு

    இதனால் அவருக்கு மகாராஷ்டிராவில் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருந்தது. இவர் பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியை மொத்தமாக முடக்கியது. அதோடு மீண்டும் அதே சத்தாரா தொகுதியில் உதயன்ராஜே போஸ்லே பாஜக சார்பாக இந்தமுறை நின்றார்.

    யார் போட்டி

    யார் போட்டி

    தேசியவாத காங்கிரஸ் சார்பாக அங்கு ஸ்ரீனிவாஸ் பாட்டீல் நின்றார். இந்த தேர்தல் பிரச்சாரம் மொத்தமும் மகாராஷ்டிராவில் உதயன்ராஜே போஸ்லேவை வைத்துதான் உருவாக்கப்பட்டது. பாஜக இவரை பெரிய அளவில் பயன்படுத்தியது.

    மகாராஷ்டிரா அரசியல்

    மகாராஷ்டிரா அரசியல்

    தேசியவாத காங்கிரஸ் தோற்க போகிறது. உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தே அதன் தொடக்கம் என்று கூட பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலரும் கூட இதே கருத்தைதான் சொன்னார்கள். ஆனால் அன்று அந்த நாள் வந்தது.. மகாராஷ்டிரா அரசியல் மொத்தமாக அன்று மாலை மாறியது.

    அந்த நாள்

    அந்த நாள்

    எல்லோரும் பாஜகவின் உதயன்ராஜே போஸ்லேதான் வெல்வார் என்று உறுதியாக நம்பிய போதுதான் சரத் பவார் அக்டோபர் 19ம் மாலை தன்னுடைய பிரச்சாரத்தை சத்தாரா தொகுதியில் மேற்கொண்டார். உதயன்ராஜே போஸ்லே குறித்தும் பாஜக குறித்தும் மாறி மாறி பேசினார்.

    மழை பெய்தது

    மழை பெய்தது

    சரியாக அப்போது மழை பெய்ய துவங்கியது. கட்சி உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து செல்ல முயன்ற போது, கொஞ்சமும் அசையாமல், கெத்தாக மழையில் நின்றபடியே சரத் பவார் பிரச்சாரம் செய்தார். மழையில் கலைந்த கூட்டம் எல்லாம் மீண்டும் வந்தது. கூட்டம் மட்டுமல்ல ஓட்டும்தான். அவரின் அந்த பேச்சு, கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தை புரட்டிப்போட்டது.

    அட முன்னிலை

    அட முன்னிலை

    இப்போது உதயன்ராஜே போஸ்லே சத்தாரா தொகுதியில் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னணியில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் வெற்றியை நெருங்கி கொண்டு உள்ளார். 30 இடங்கள் கூட வெல்லாது என்று கருதப்பட்ட தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    என்ன பாடம்

    என்ன பாடம்

    இதற்கு எல்லாம் காரணம் சரத் பவார்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். எல்லோரும் அவரின் அரசியல் முடிந்துவிட்டது என்று சொன்ன போதும் அவர் தனது பணியை மேற்கொண்டார். மழையில் கூட கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.. தற்போது வென்றும்விட்டார். அவரிடம் ராகுல் காந்தி தொடங்கி சோனியா காந்தி வரை கற்க வேண்டிய அரசியல் பாடம் நிறைய இருக்கிறது.

    English summary
    NCP Sharad Pawar taught a political lesson by winning in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X