மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"Wine நல்லதுப்பா! விவசாயிகளின் வருவாய் டபுள் மடங்கு உயரும்.." சிவசேனா தலைவரின் வித்தியாசமான விளக்கம்

Google Oneindia Tamil News

மும்பை: ஒயின் என்பது மது வகையே இல்லை என்று தெரிவித்துள்ள சிவசேன தலைவர் சஞ்சய் ராவத், ஒயின் விற்பனை மூலம் விவசாயிகளின்வருமானம் இரட்டிப்பாக உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகியோரின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த அரசு வைன் மது வகை விற்பனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மாஸ்க் போடவில்லை.. அதனால் நானும் போடவில்லை.. சிவசேனா எம்பியின் குபீர் விளக்கம்பிரதமர் மோடி மாஸ்க் போடவில்லை.. அதனால் நானும் போடவில்லை.. சிவசேனா எம்பியின் குபீர் விளக்கம்

 சூப்பர் மார்கெட்டில் ஒயின்

சூப்பர் மார்கெட்டில் ஒயின்

அதாவது மகாராஷ்டிராவில் இனி சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட கடைகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் மது வகைகளை விற்பனை செய்யலாம். இங்கு விற்பனை செய்யப்படும் வைனில் குறைந்த அளவு ஆல்கஹால் இருக்க வேண்டும் என்றும் இதற்காக ஆண்டுக்கு ரூ 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

சூப்பர் மார்கெட்களில் வைன் மது வகை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் பீர் உள்ளிட்ட இதர மது வகைகள் அனுமதி செய்ய அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகாமையில் இருக்கக் கூடிய சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படாது என்றும் அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 பாஜக தாக்கு

பாஜக தாக்கு

இருப்பினும், இதை அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது இது குறித்து அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ். "சிவசேனா தலைமையிலான அரசு மகாராஷ்டிராவை மத்ய-ராஷ்டிராவாக (மதுபான மாநிலம்) மாற்றும் முயற்சி தான் இது. அவர்களுக்கு மதுபான தொழிலின் மீதான காதலால் தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பு மதுவிலக்கு அமலில் இருந்த சந்திரபூர் மாவட்டத்திலும் இவர்கள் மதுவிலக்கை நீக்கியுள்ளனர். கலால் வரியையும் பாதியாகக் குறைத்துள்ளனர்" என்று கடுமையாகச் சாடினார்.

 ஒயின் மதுபானமே இல்லை

ஒயின் மதுபானமே இல்லை

இதற்கு சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் ராஜ்ய சபா எம்பியுமான சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிரா அரசு, சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் ஒயின் வகை மது விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஒயின் என்பது ஒரே மதுபானமே இல்லை. அதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

 விவசாயிகளுக்கு நல்லது

விவசாயிகளுக்கு நல்லது

ஒயின் விற்பனை அதிகரித்தால், அதனால் விவசாயிகள் தான் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நாங்கள் இதைச் செய்துள்ளோம். பாஜக இந்த முடிவை எதிர்க்கிறது அவர்கள் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு நல்லது செய்யும் வகையில் பாஜக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால், சிவசேனா அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளது" என்றார்.

English summary
Shiv Sena leader Sanjay Raut say that government's decision to allow sale of wine in supermarkets would boost farmers' income. Maharashtra's plan to increase the income of farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X