"காங்கிரஸ் பலமடைய வாழ்த்துகிறேன்.." என்ன திடீருன்னு இப்படி சொல்றாரே நிதின் கட்கரி.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை : காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுவாக வரவேண்டும் என மனதார வாழ்த்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி வலுவிழக்கிறது என்றால், மாநிலக் கட்சிகள் எதிர்க்கட்சியாக உருவெடுக்கிறது என்று அர்த்தம். இது நல்லது அல்ல.

காங்கிரஸ் கட்சி வலுவடைய வேண்டும்

காங்கிரஸ் கட்சி வலுவடைய வேண்டும்

ஜனநாயகம் இரண்டு சக்கரங்களால் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சக்கரம் ஆளுங்கட்சி. மற்றொன்று எதிர்க்கட்சி. காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுவடைய வேண்டும் என்று நான் மனதார சொல்கிறேன். எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேருவை இதற்கு உதாரணமாக கூறலாம். அடல் பிகாரி வாஜ்பாய் மக்களவைத் தேர்தல் தோல்வி அடைந்தபோது நேரு அவருக்கு உரிய அதே மரியாதையை வழங்கினார்.

வெற்றி நிச்சயம் இருக்கும்

வெற்றி நிச்சயம் இருக்கும்

எனவே ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி என்பது மிக மிக முக்கியம். காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை கண்டு மனம் உடைந்துவிடாமல் கட்சியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் கட்சியில் தொடர வேண்டும். அவர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொடர் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது. தோல்வி என்ற ஒன்று இருந்தால் வெற்றி என்பதும் நிச்சயம் இருக்கும்.

பாஜக ஒரு காலத்தில்...

பாஜக ஒரு காலத்தில்...

ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 2 இடங்களே இருந்தன. ஆனால், காலங்கள் மாறின. கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பு காரணமாக அடல் பிகாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமர் ஆனார். எனவே விரக்தியடையும்போது சித்தாந்தங்களை கைவிடக் கூடாது." என்றார்.

கட்சித் தலைவர்களுக்கு முரணான கட்கரியின் பேச்சு

கட்சித் தலைவர்களுக்கு முரணான கட்கரியின் பேச்சு

பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளில் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதற்கு முரணாக பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியின் இந்த பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி - கட்கரி மோதல் போக்கு

மோடி - கட்கரி மோதல் போக்கு

ஏற்கனவே நிதின் கட்கரிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக அரசல் புரசலாக பேச்சு அடிபட்டு வந்தது. 2019 மக்களவைத் தேர்தலின்போதுகூட பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நிறுத்த வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸும். நிதின் கட்கரியை பரிந்துரைத்ததாக கூறப்பட்டது." குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+