• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'தீவிர விசாரணையால்' சுஷாந்த் சிங் பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம்.. சரியான போதை ஆசாமியாம்.. ரியா ஷாக்

|

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்க, விசாரிக்க அவருக்கு எதிராகத் தான் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் பீகார் மாநிலத்தில் பிறந்தவர். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இவரது மரணம் அரசியல் ரீதியாக கையில் எடுக்கப்பட்டது.

மோடியே ரூ15 லட்சம் கொடு... பாஜக ஆர்ப்பாட்டத்தில் முதியவரின் 'வெறி' கோஷம்- காண்டானது கூட்டம்!

விசாரணை வளையம்

விசாரணை வளையம்

நாட்டில் கொரோனா பரவல் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் விட்டு விட்டு இந்த விஷயத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் விளைவாக விசாரணை சிபிஐ வசம் சென்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா சக்கரபோர்த்தி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். தினமும் அவரை ஏதாவது ஒருவகையில் குற்றம்சாட்டி வட இந்திய ஊடகங்களில் செய்திகள் கசிய விடப்பட்டு வருகிறது.

ரியா வேதனை

ரியா வேதனை

தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றி செய்திகள் அடிபடும் வகையில் விசாரணை ஏஜென்சியில் இருந்து தகவல்கள் கசிய விட படுவதாக கூறப்படுகிறது. தனது பர்சனல், வாட்ஸ்அப் உரையாடல் கூட விசாரணை ஏஜென்சிகள், ஊடகத்திற்கு கசிய விடப்பட்டதாக ரியா வேதனை வெளிப்படுத்தியிருந்தார்.

ரியா கைது

ரியா கைது

இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் அதிகாரிகளால் இம்மாதம் ரேகா கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம், அதன் பின்னணியில் உள்ள போதைப் பொருள், இந்த போதை பொருள் விவகாரத்தால் ரியா பங்கு என இந்த விசாரணை வளையம் சுற்றி சுற்றி வருகிறது.

ஜாமீன்

ஜாமீன்

2 வாரங்களை சிறைச்சாலையில் கடந்த பிறகு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ரியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மூன்று மத்திய விசாரணை அமைப்புகள் இந்த வழக்கில் விசாரணை நடத்திய போதிலும், போதைமருந்து உள்ளிட்ட விவகாரங்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் தரமுடியவில்லை.

போதைக்கு அடிமை

போதைக்கு அடிமை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தி போதை மருந்து பெற்றுக்கொண்டார். அவரது ஊழியர்களை அனுப்பி போதை மருந்துகளை பெற்று உட்கொண்டு வந்தார். ஒருவேளை தற்போது உயிரோடு இருந்தால் அவர் போதை மருந்து பயன்படுத்தியதற்காக தண்டனைக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும். சிறிய அளவிலான போதை மருந்து பயன்படுத்தியதற்காக ஜாமீனில் வெளிவரும் பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஒரு வருடம் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கும்.

சமையல்காரர்

சமையல்காரர்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டு சமையல்காரர் நீரஜ் என்பவரிடம் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை தனது படுக்கை அறையில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிடுவது வழக்கம். சுஷாந்த் சிங் மரணம் அடைந்தபோது அவரது படுக்கையறையில் போதைப் பொருட்கள் அனைத்தும் காலியாகி விட்டது என்பதை சமையல்காரர் உறுதி செய்துள்ளார். சுஷாந்த் சிங் போதை மருந்துக்கு அடிமையானவராக இருந்ததோடு, அதற்கு அவருக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தியுள்ளார். போதை மருந்து உட்கொள்பவர்களுக்கு, அதிகபட்சம் ஒரு வருடம் சிறை தண்டனை. ஆனால், சில நேரங்களில் அதற்கு பணம் செலுத்தியவர்களுக்கு அதிகபட்சம் 20 வருட சிறை தண்டனை என சட்டத்தில் இருக்கின்றது. இவ்வாறு ரியா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு உதவாதே

தேர்தலுக்கு உதவாதே

விசாரணை ஆரம்பிக்கும்போது சுஷாந்த் சிங் ஒரு அப்பாவி என்ற தோரணை மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் விசாரணை வரம்பை அதிகரிக்க அதிகரிக்க அவர் போதை பொருட்கள் உட்கொள்பவர் போன்ற தோற்றம் மக்களிடம் எழ ஆரம்பித்துள்ளது. இது ஒருவகையில் தேர்தல் யுக்திகளுக்கு இது பாதகமாகத்தான் போகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 
 
 
English summary
Actor Rhea Chakraborty says Sushant Singh Rajput took advantage of those closest to him on his drug habit.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X