விவாகரத்து.. கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க மனைவிக்கு உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: விவாகரத்து செய்த ஆசிரியை, தனது கணவருக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதி இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் ஏற்பட்டு உள்ளது.

சுமார் 23 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறினார் பெண். கணவர் தன்னை கொடுமைப்படுத்தினார் என்பது அவர் சுமத்திய குற்றச்சாட்டு.

 ரூ.15,000 ஜீவனாம்சம் கேட்டு வழங்கு தொடர்ந்த கணவன்

ரூ.15,000 ஜீவனாம்சம் கேட்டு வழங்கு தொடர்ந்த கணவன்

இதனை தொடர்ந்து அவருக்கு விவாகரத்து கிடைத்ததை அடுத்து தம்பதிகள் பிரிந்து தனித்தனியே வாழத் தொடங்கினர். இந்த நிலையில், மனைவியிடம் இருந்து தனக்கு மாதம் தோறும் ரூ.15,000 ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கணவன்.

மனைவியின் படிப்புக்காக எல்லாத்தையும் தியாகம் செய்தேன்

மனைவியின் படிப்புக்காக எல்லாத்தையும் தியாகம் செய்தேன்

அந்த மனுவில், தனக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை என அவர் குறிப்பிட்டு உள்ளார். "எனது மனைவி M.A., B.Ed. படித்து இருக்கிறார். அவர் படித்து பெரிய ஆளாக நான் உதவினேன், அவர் தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக நான் வீட்டை பார்த்துக் கொண்டேன். தற்போது எனக்கென எதுவும் இல்லை.

மனைவி விவகாரத்து செய்ததால் அவமானம்

மனைவி விவகாரத்து செய்ததால் அவமானம்

இந்த விவாகரத்து எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்து உள்ளது. என்னிடம் எந்த விதமான சொத்துக்களும் இல்லை. நோய் வாய்ப்பட்டு தவிக்கிறேன். எனவே மாதம்தோறும் எனது மனைவியிடம் ரூ.15,000 ஜீவனாம்ச தொகையை பெற்றுத் தர வேண்டும்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 மகளை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

மகளை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்


இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான அவரது மனைவி, எனது கணவர் மளிகை கடை வைத்திருக்கிறார். சொந்தமாக ஆட்டோவும் அவரிடம் இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருகிறார். எனது மகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது.

 கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க

கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க

இருதரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி பாரதி டாங்க்ரே, மாதந்தோறும் கணவன் தன்னை பராமரித்துக் கொள்வதற்காக ரூ.3,000-ஐ மனைவி நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன் இதுவரை பராமரிப்பு பணம் செலுத்தாததற்காக ஆசிரியையின் மாத ஊதியத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.5,000-ஐ பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+