பெரும் பரபரப்பு... மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதிரடி கைது.. பாஜகவுக்கு ஷாக் தந்த சிவசேனா..!
மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக புனேவில் சதுர்ஷிரிங்கி போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதால், அந்த எப்ஐஆர் பதிவுகளை நீக்க கோரி மும்பை ஹைகோர்ட்டை நாடியிருந்தார் நாராயண் ரானே.. இந்நிலையில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன மத்தியஅமைச்சர் நாராயண் ரானேவை போலீசார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மகாராஷ்டிராவில் பரபரப்பை கூட்டி வருகிறது.
இப்போது மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருக்கிறார்.. தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சேவசேனை, பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.. அடிக்கடி இவர்கள் முட்டிக் கொள்வார்கள்..

பாஜக
மகாராஷ்டிரத்தில் பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வரும் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாராயண் ரானே சொல்லி கொண்டே இருப்பவர். சிவசேனையில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 35 பேர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர் என்றும், வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிர அரசு வாக்குறுதி தந்ததே அது எங்கே? எப்போது தள்ளுபடி செய்வார்கள்? என்று கேள்விகளை விடாமல் எழுப்பி கொண்டே இருப்பவர்.

ஆசீர்வாதம்
விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ளதால், மக்களின் ஆசிர்வாதம் பெறும் நோக்கிலும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடத்தில் பிரசாரம் செய்யும் வகையிலும் பாஜக.வை சேர்ந்த 43 மத்திய அமைச்சர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்... கடந்த 16ம் தேதி தமிழகம், உத்தர பிரதேசம் உள்பட 19 மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் இந்த யாத்திரை மேற்கொண்டனர்...

யாத்திரை
கோவிட் நெறிமுறைகளை காரணம் காட்டி மகாராஷ்டிராவில் பாஜக தலைவர்களின் யாத்திரைக்கு பல இடங்களில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் யாத்திரையை நடத்தி கொண்டும், அதில் பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு கொண்டும் வருகிறார் நராயண் ரானே.

கையெழுத்து
2 நாளைக்கு முன்புகூட, நாராயண் ரானே தன்னுடைய ஜன் ஆசிர்வாத் யாத்திரை கூட்டத்தில் பேசும்போது, "ஏக்னாத் ஷிண்டே நகர மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தாலும், அந்த துறை சம்மந்தமான ஃபைல்களில் கையெழுத்து மட்டும் தான் போடுகிறார்... நகர மேம்பாட்டு துறை குறித்த எல்லா முடிவுகளையும் முதல்வரின் மகன் ஆதித்ய தாக்கரேதான் எடுக்கிறார் என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி இருந்தார்.

குறி
அதுமட்டுமல்ல, ஏக்னாத் ஷிண்டேஅதிருப்தியில் இருக்கிறார்.. ஒருவேளை அவர் என்னை அணுகினால், பாஜகவில் ஜனதாவில் இணைத்து கொள்வேன்" என்று அவருக்கு வலையும் வீச ஆரம்பித்துள்ளார்..இப்படி பலவீனமானர்களை குறி வைத்து நாராயண் ரானேவின் அரசியல் நகர்ந்து வருகிறது.

சுதந்திரம்
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மீண்டும் நாராயண் ரானே ஆட்சேபனைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.. "சுதந்திர ஆண்டை முதல்வர் உத்தவ் தாக்கரே அறியாதது வெட்கக்கேடானது... அவர் தனது உரையின் போது சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று உதவியாளரிடம் கேட்டு அப்புறம் சொல்கிறார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால், (அவருக்கு) ஒரு அறை கொடுத்திருப்பேன்" என்று என்று தன்னுடைய மக்கள் ஆசிர்வாதம் பயணத்தின்போது பேசியிருந்தார்.

போஸ்டர்
பால் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் அரசியல் பயணத்தை ஆரம்பித்ததையும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் செம்பூரில் கோழிக்கடை நடத்தி வந்ததை விமர்சிக்கும் வகையிலும், மும்பை மற்றும் இதர பகுதிகளில் கோழித் திருடன் என்று நாராயன் ரானேவை விமர்சித்து அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்... அவரது வீட்டை நோக்கி பேரணியாக சென்று சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

புகார்
இப்படிப்பட்ட சூழலில்தான், யுவ சேனா புகார் ஒன்றினை தந்துள்ளதையடுத்து, நாராயண் ரானேவுக்கு எதிராக புனேவில் சதுர்ஷிரிங்கி போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது... ஆனால், தன் மீது போடப்பட்ட எப்ஐஆர்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாராயண் ரானே மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.. எனினும் ஐபிசி பிரிவு 505-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாராயண் ரானே விரைவில் கைது செய்யப்படலாம் என்றார்கள்... முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாக பேசிய அவரை கைது செய்ய போலீசார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நாசிக்
ஆனால், போலீசார் இதுபற்றி எவ்வித தகவலையும் காலையில் இருந்து தெரிவிக்காமல் இருந்தது.. இருந்தபோதிலும், கொங்கன் பகுதியில் இருக்கும் சிப்லனின் அவர் இருப்பதாக தகவல் அறிந்து நாசிக் போலீசார் ஒரு குழுவினர் அங்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்பட்டது.. இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை சதுர்ஷிரிங்கி போலீசார் கைது செய்துள்ளது.. ஒரு மத்திய அமைச்சரை சிவசேனா கட்சி கைதது செய்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை கூட்டி வருகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications