மகாராஷ்டிரா பாஜக ஆட்சிக்கு ஆபத்து? அஜித் பவாரின் மரணத்தால் ஓங்கும் ஷிண்டே சிவசேனா! பதறும் பட்னாவிஸ்
மும்பை: மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் இன்று விமான விபத்தில் பலியானார். அவரது மரணம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தாண்டி மகாராஷ்டிரா அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. குறிப்பாக ஆளும் பாஜக ஆட்சிக்கு சிக்கலை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு புறப்பட்டார். பாராமதியில் நடைபெற இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்றார். விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் எனும் நிறுவனத்தின் ‛பம்பார்டியர் லியர்ஜெட் 45' ரக விமானத்தில் அவர் பயணித்தார். இது சிறிய ரக விமானமாகும்.
இந்த விமானத்தில் அஜித் பவாருடன் அவருடைய ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர் சென்றனர். 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கினர். பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் அஜித் பவார் உள்பட 5 பேரும் இறந்தனர்.
பாஜக கூட்டணி ஆட்சி
இந்நிலையில் தான் அஜித் பவாரின் மரணம் என்பது அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியை தாண்டி மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 144 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
எம்எல்ஏக்கள் எண்ணிக்கை
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மாறாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மாறியது. ஆட்சியமைக்க 144 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் பாஜகவுக்கு 132 எம்எல்ஏக்கள் தான் வென்றனர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த 3 கட்சிகள் மட்டுமின்றி ஜேஎஸ்எஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஆர்எஸ்பிஎஸ் , ஆர்எஸ்விஏ, ஆர்ஒய்எஸ்பியின் தலா ஒரு எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் 2 பேரின் ஆதரவில் மொத்தம் 237 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.
முதல்வர் பதவி மீது ஷிண்டே கண்
பாஜக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் கூட ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை பெற துடித்தார். இதுதொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது அஜித் பவார் தேவேந்திர பட்னாவிஸ்க்கு தான் ஆதரவு வழங்கினார். இதையடுத்து தான் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானதோடு, ஏக்நாத் ஷிண்டோ, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வரானார்கள்.
ஷிண்டே சிவேசேனாவை அடக்கிய அஜித் பவார்
இப்படி அஜித் பவார் பாஜகவுக்கு பக்கப்பலமாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இடையே பிரச்சனை வராமல் இருக்க அஜித் பவார் முக்கிய நபராக இருந்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கூட்டணியில் பல்வேறு பொறுப்பு, கொள்கை வகுத்தல், அரசு நிகழ்ச்சிகளில் தலைமைத்துவம் உள்ளிட்டவற்றில் கூட்டணிக்குள் சிவசேனாவுடன் கருத்து மோதல் எழும்போதெல்லாம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு பக்கப்பலமாக அஜித் பவார் இருந்தார்.
இதனால் சிவசேனாவின் குரல் எடுபடாமல் போனதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாஜக கூட்டணியில் அஜித் பவாரின் இருப்பு என்பது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் நேரடியாக முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் மோதுவதை தவிர்த்து வந்தனர். சிவசேனா 51 எம்எல்ஏக்களுடன் வெளியேறினாலும் கூட அஜித் பவாரின் 41 எம்எல்ஏக்களின் ஆதரவில் ஆட்சியை பாஜகவால் எளிதாக தொடர முடியும். இதனால் ஷிண்டேவின் சிவசேனா அமைதியாக இருந்தது.
அஜித் பவார் கட்சி என்னவாகும்?
ஆனால் இப்போது அஜித் பவார் மறைந்துவிட்டார். இப்படி அஜித் பவார் இல்லாத நிலையில் அவரது கட்சி என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித் பவார் மறைந்துள்ள நிலையில் அவரது கட்சியில் 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது கட்சியினர் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருப்பார்களா? இல்லாவிட்டால் மீண்டும் சரத்பவாருடன் கட்சியை இணைப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை சரத்பவாருடன் கட்சியை இணைத்தால் ஆளும் கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 41 சரியும். அப்படி நடந்தால் பெரும்பான்மை இல்லாத பாஜகவை 51 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவின் ஆதரவு கட்டாயம் தேவை. இதனால் சிவசேனாவின் கை ஓங்கும். அவர்கள் பாஜகவை ஆட்டிப்படைப்பார்கள்.
பாஜக - சிவசேனா மோதலின் அதிகரிக்கலாம்
ஏனென்றால் அஜித் பவாரின் எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்எல்ஏக்கள் இருந்தால் தான் பாஜகவால் ஆட்சியை தக்க வைக்க முடியும். தற்போது மும்பை மாநகராட்சி மேயர் பதவி உள்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இடையே மோதல் உள்ளது.
இப்படியான சூழலில் அஜித் பவாரின் இந்த மரணத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தி முக்கிய பதவிகளை கைப்பற்ற ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா காய் நகர்த்தலாம். இதனால் அஜித் பவாரின் மரணம் என்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் களேபரத்தை வரும் காலத்தில் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications