இதுதான் வாழ்க்கை.. இணையத்தை உலுக்கிய இன்ஸ்ட்டா பிரபலம்.. கடைசி போஸ்ட் கூட சந்தோசமா போட்டாங்களே! ஏன்?
மும்பை: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவரின் மரணம் இணையத்தை உலுக்கி உள்ளது. அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த போஸ்ட் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் நடிகை தீபா என்பவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவை சேர்ந்தவர் மௌலி என்கிற தீபா. சினிமா மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் சினிமா வாய்ப்புகளை தேடி வந்தவர்.. சமீபத்தில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இவர் காமெடியாக நடித்த ரீல்ஸ் வீடியோக்கள் பல அப்போது இணையத்தில் வைரலாகின. தற்போது அதேபோல் இன்ஸ்டாகிராமில் வைரலாக இருக்கும் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நடிகையின் பெயர் துனிஷா சர்மா!

என்ன நடந்தது?
மஹாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் துனிஷா சர்மா. இவருக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது. இன்ஸ்டாகிராமில் 11 லட்சம் பின்தொடர்பாளர்கள் இவருக்கு இருக்கின்றனர். இவர் ஒரு போட்டோ போட்டாலே 4 -5 லட்சம் பேர் இவருக்கு லைக் செய்வது வழக்கம். அதேபோல் துனிஷா சர்மா வீடியோ போட்டால் எளிதாக 2-3 லட்சம் பேர் பார்வையிடுவார்கள். ஜாலியாக சிரித்தபடி வீடியோ போடுவது, நண்பர்களுடன் சுற்றுலா சென்று வீடியோ போடுவது, மாடலிங் வீடியோ போடுவது என்று இவர் இன்ஸ்ட்டா பக்கம் கலர்புல்லாக இருக்கும்.

போட்டோ
இவரின் போட்டோ கேப்ஷன்களில் எல்லாம் நம்பிக்கையான வார்த்தைகள் மிளிரும். இந்த நேரத்தில் வாழுங்கள்.. இந்த கணத்தில் சந்தோசமாக இருங்கள்.. அது போதும் என்றெல்லாம் கேப்ஷன் போட்டு துனிஷா சர்மா போஸ்ட் போட்டுள்ளார். இவரின் போஸ்டர்களை பார்த்தாலே.. சந்தோசமா இருக்காங்களா என்றுதான் சொல்ல தோன்றும். சிறுவயதில் இருந்தே இவர் படங்களில் நடித்து வந்துள்ளார். அதேபோல் இந்தி சீரியல்கள் பலவற்றில் நடித்து வந்துள்ளார். Ali Baba Dastaan-E-Kabul என்ற சீரியலில் இவர் லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியல் வெற்றிபெற்ற பின் சில பாலிவுட் படங்களிலும் சிறு சிறு ரோல்களில் துனிஷா சர்மா நடித்தார்.

தற்கொலை
ஆனால் இப்படிப்பட்ட துனிஷா சர்மா நேற்று முதல்நாள் திடீரென தற்கொலை செய்து கொண்டார். வாசை என்ற சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த இவர் கையை கிழித்து கொள்வது போல காட்சி இருந்துள்ளது. இதற்காக கையில் பொய்யாக மேக் அப் போட்டுள்ளனர். அதை இவரும் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் ஜாலியாக போட்டுள்ளார். அதன்பின் இன்னொரு போஸ்டில் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளாறு செல்லும் நபர்களை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கையாகவும் போஸ்ட் செய்துள்ளார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் கேரவனில் தனது அறைக்குள் சென்றவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

என்ன நடந்தது
அறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்பதால் அவரை பார்க்க கேரவன் சென்றுள்ளனர். உள்ளே சென்றால் அங்கே தூக்கு மாட்டி துனிஷா சர்மா பிணமாக தொங்கி உள்ளார். இவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசி போஸ்டில் கூட நம்பிக்கையாக பேசிய துனிஷா சர்மா எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை கடிதம்
துனிஷாவின் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷீசன் முகமது கான் என்ற சக நடிகருடன் இவர் காதலில் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன் இவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசாரிடம் இது தொடர்பான துனிஷாவின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஷீசன் முகமது கானை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications