Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர்ந்த மகாராஷ்டிரா..பிளாக் மேஜிக்கை நம்பிய பெண்! கணவரின் நண்பர்களே கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனை மற்றும் தீய சக்திகளை விரட்டுவதாக கூறி 35 வயது பெண்ணை அவரது கணவரின் நண்பர்களே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தலாசாரியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் தன்னுடைய வீட்டில் வாஸ்து குறைபாடுகள் மற்றும் தீய சக்திகள் இருப்பதாக நம்பி இருக்கிறார். இதனை போக்கிவிட்டால் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் போய்விடும் என பலர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

 Woman was raped by her husbands friends who believe black magic in Maharashtra

குறிப்பாக அந்த பெண்ணின் கணவர் மீதே தீய சக்தி இருப்பதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர் கணவரின் நண்பர்கள் உதவியை நாடி இருக்கிறார். அதில் ஒருவர் மாந்திரீகம் போன்றவற்றை செய்பவர் எனக் கூறப்படுகிறது. அவரது உதவியை அந்த பெண் நாடி இருக்கிறார். அப்போதுதான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டி இருக்கிறார்கள்.

தீய சக்தி, வாஸ்து பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்க அனுகியபோது தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நகை பணத்தை பறித்துக்கொண்டதாகவும் 5 பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் 5 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய கணவரின் நண்பர்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளார்கள். அவரது கணவர் மீது சில தீய சக்திகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அமைதியை மீண்டும் பெற சில சடங்குகளில் பங்கேற்க வேண்டும் என்று பெண்ணிடம் கூறி தவறாக நடந்துகொண்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

குற்றவாளிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லத் தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டவர் தனியாக இருக்கும்போது சடங்குகளை நடத்தும் அவர்கள், அவருக்கு 'பஞ்சமித்' என்று சொல்லப்பட்ட பானத்தை கொடுத்து மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அமைதியான செழிப்பான வாழ்க்கையை உறுதிசெய்ய பல்வேறு சடங்குகளை செய்வதாகவும், அவரது கணவருக்கு நிலையான அரசு வேலை கிடைப்பதற்காகவும் தங்கம் மற்றும் பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் தானேவில் உள்ள ஏரூர் காட்டில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், பின்னர் லோனாவாலாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில், கண்டிவாலியில் அமைந்துள்ள முதன்மை குற்றவாளியின் மடத்தில் அவர்கள் பலாத்காரம் செய்து, ரூ.2.10 லட்சம் பணம் மற்றும் தங்கத்தையும் எடுத்துச் சென்றதாக அவர் புகாரளித்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செப்டம்பர் 11 ஆம் தேதி புகார் அளித்ததை தொடர்ந்து ரவீந்திர பாடே, திலீப் காயக்வாட், கௌரவ் சால்வி, மகேந்திர குமாவத் மற்றும் கணேஷ் கடாம் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

"ஐந்து குற்றவாளிகளும் மற்றவர்களிடமும் இதே முறையைப் பயன்படுத்தி உள்ளார்களா என்பது பற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று தாலசாரி காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் விஜய் முதகட்க் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பால்கர் காவல் கண்காணிப்பாளர் பாலசாகேப் பாட்டீல், வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஐந்து பேரும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை), 376(2)(n) (ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றம்), 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+