கொரோனாவுக்கு உலக அளவில் 60,25,259 பேர் பலி - 38 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 60,25,259 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 44,76,41,811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38,12,60,714 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 70,530 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 60,25,259 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 11,66,541பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 44,77,00,250 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17,09,823 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 38,14,34,513 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,782பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 60,26,740 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 3,139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515,241 பேராக அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
-
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications