For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014-ல் அந்த "இளவரசர்" என்ன செய்தார் தெரியுமா..ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி.. பஞ்சாப்பை தெறிக்கவிட்ட மோடி

பஞ்சாப்பில் பிரதமர் பிரச்சாரம் செய்யும்போது ராகுலை விமர்சித்தார்

Google Oneindia Tamil News

லூதியானா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், ஊழல், போதைப்பொருள் இல்லாத புது பஞ்சாப்பை உருவாக்குவோம்.. அப்படி புதிய பஞ்சாப் உருவாகும்போது புதிய இந்தியா உருவாகும் என்று பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சாரத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. அத்துடன், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது.. அதேசமயம், தேசிய கட்சி தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு

இதில் வரும் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க போகிறது.. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பஞ்சாப் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல்காந்தி, பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு பேச்சிலும் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வேன் என்று சொன்னாரே, 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று சொன்னாரே, ரூ.15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பிவிட்டுவந்தார். இதையடுத்து பிரதமர் மோடி பஞ்சாப்பில் பிரச்சாரம் செய்தபோது, ராகுலை பதிலுக்கு சரமாரியாக விமர்சித்தார். அப்படி விமர்சிக்கும்போது, ஹெலிகாப்டர் விவகாரத்தை பற்றி பேசினார். அந்த பேச்சுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 பஞ்சாப்

பஞ்சாப்


இதற்கு காரணம் உண்டு... கடந்த ஜனவரி 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப்புக்கு சென்றபோது, விவசாயிகள் திடீரென நடத்திய போராட்டத்தால் ஃபெரோஸ்பூர் அருகே மேம்பாலத்தில் அவரது வாகனங்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியதாக போயிற்று.. அதனால், பிரதமர் தன்னுடைய பயணத்தை ரத்துசெய்து டெல்லி திரும்பினார். எனினும், பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாகவும், அதற்குப் பஞ்சாப் காங்கிரஸ் அரசும் போலீசும்தான் காரணம் என்றும், அது குறித்த அறிக்கை தேவை என்றும் மத்திய அரசு கேட்டிருந்தது..

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதேபோல, பிப்ரவரி 9-ம் தேதி லூதியானா, பதேகர் சாஹிப் ஆகிய மாவட்டங்களில் காணொலி மூலம் பிரதமர் கலந்து கொண்டாலும், இன்று பிரச்சாரத்துக்காக பஞ்சாப்புக்கு சென்றிருந்தார்.. பிப்ரவரி 16, 17 தேதிகளிலும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்ள போகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பிரதமரின் வருகையால் சண்டிகர் பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டது... இந்த அறிவிப்பினால், முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் ஹெலிகாப்டரின் பயணம் ரத்தானது.

பிரச்சாரம்

பிரச்சாரம்


அதனால் ராகுலின் பிரச்சாரத்திலும் சன்னியால் கலந்து கொள்ள முடியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்றைய பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு ராகுலை கடுமையாக விமர்சித்தார்.. பிரதமர் உரையாற்றியபோது, "2014 எம்பி தேர்தலின்போது, பிரச்சாரத்துக்காக பஞ்சாப் வந்தேன்.. அப்போது என்னுடைய ஹெலிகாப்டர் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.. அந்த சமயம் பிரதமர் வேட்பாளராக என்னடைய பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது... ஆனால் அந்த நேரத்தில் நான் பதான்கோட்டுக்கும், ஹிமாசல பிரதேசத்துக்கும் செல்ல வேண்டியிருந்தது.

இளவரசர்

இளவரசர்

அப்படி இருந்தும், என்னுடைய ஹெலிகாப்டர் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது... காரணம் அவர்களின் இளவரசர் அப்போது அமிர்தசரஸில் இருந்தார்... எதிர்க்கட்சியில் யார் பணிபுரிந்தாலும் அவர்கள் தடுத்துவிடுவார்கள்.. அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டது.. அமரீந்தர் சிங் அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நாங்கள் இயக்கிவந்ததாக பிரியங்கா விமர்சிக்கிறார்களே, காங்கிரஸ்தான் ஒரு குடும்பத்தினரால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நடத்தப்படுகிறது... அந்த கட்சியின் நிலைமையை பாருங்க.. உட்கட்சி பூசல் அதிகமாகிவிட்து..

 புதிய பஞ்சாப்

புதிய பஞ்சாப்

ஒரு பலமான அரசை அவர்களால் இந்த பஞ்சாப்புக்கு வழங்க முடியுமா? நாற்காலியை தக்கவைப்பதிலேயே தீவிரமாக இருப்பவர்களால், பஞ்சாப்பில் வளர்ச்சியை நிச்சயம் கொண்டுவர முடியாது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், ஊழல், போதைப்பொருள் இல்லாத புது பஞ்சாப்பை உருவாக்குவோம்.. அப்படி புதிய பஞ்சாப் உருவாகும்போது புதிய இந்தியா உருவாகும். பிரகாசமான எதிர்காலத்திற்கான எங்கள் முயற்சியில், எந்த மைல்கல்லையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்" என்றார் பிரதமர்.

English summary
My Chopper Held Up By Yuvraj in 2014", PM Modi slams Rahul Gandhi at Punjab campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X