காதலன் மீது தாக்குதல்.. சுற்றுலா வந்த பெண் கூட்டு வன்புணர்வு.. மைசூர் சாமுண்டி மலையில் அதிர்ச்சி!
மைசூர்: கர்நாடகா மாநிலம் மைசூரில் இளம் பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல சுற்றுலாத்தளமான கோவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் 2 சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் வேடத்தில் கடற்கரை பகுதிக்கு வந்த கும்பல் அந்த சிறுமிகளின் நண்பர்களை அடித்து போட்டுவிட்டு இரண்டு பேரையும் வன்புணர்வு செய்தனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் போகாத நிலையில் இன்னொரு பிரபல சுற்றுலாத்தளமான கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலை பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்து உள்ளது.

வன்புணர்வு
மைசூரில் உள்ள சாமுண்டி மலை பகுதி சுற்றுலா பயணிகள் இடையே பிரபலமானது. பெங்களூரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பகுதி உள்ளது. மைசூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இருக்கும் மலை பகுதியும், ஹெலிபேடும், ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலும் பிரபலமானது. இதனால் இங்கு இளைஞர்கள், குடும்பங்கள், பெண்கள் பலர் சுற்றுலா செல்வது வழக்கம்.

சுற்றுலா
இந்த நிலையில் இந்த பகுதிக்கு தனது காதலனுடன் சுற்றுலா வந்த பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உள்ளார். நேற்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. நேற்று மாலை தனது காதலுனுடன் அந்த பெண் ஹெலிபேட் அருகே நின்று மலையை ரசித்துக் கொண்டு இருந்தார்.

மர்ம கும்பல்
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அந்த பெண்ணிடம் காசு கேட்டுள்ளனர். அவர்களிடம் இருக்கும் பணம் மொத்தத்தையும் கேட்டுள்ளனர். இதை அந்த பெண் கொடுக்க மறுத்த நிலையில், அவரின் காதலை அடித்து போட்டுவிட்டு , அங்கேயே அந்த பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

மோசம்
அதோடு அந்த பெண்ணை மோசமாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர். மலைப்பகுதி என்பதால் சம்பவம் நடந்த போது அங்கு யாரும் இல்லை. இதில் உடலில் மோசமாக காயம் அடைந்த பெண் சுயநினைவை இழந்துள்ளார். நேற்று இரவு 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில் இரவு 1 மணிக்கு அந்த பெண்ணும், அவளின் காதலனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது எப்போது
அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகிய நிலையிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ள்ளார். அடுத்தடுத்து இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற கொடுமைகள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications