மூலப்பத்திரம்.. நாகப்பட்டினம் அருகே சோழர் கால செப்பு பட்டயத்தால் முதியவர் சொத்தை மீட்டது எப்படி?
நாகப்பட்டினம்: இன்றை சூழலில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிப்பது அதிகரித்துள்ளது.இதனால் சொத்துக்களின் உண்மையான வாரிசுகளை அறிவதற்கு மூலப்பத்திரம், பூர்வீகமாக சொத்து யார் பெயரில் இருந்தது என ஆராய்ந்து தான் சொத்துக்களின் உண்மையான உரிமையாளரை அதிகாரிகள் உறுதி செய்கிறார்கள். இந்நிலையில் நாகை அருகே சோழர் கால செப்பு பட்டயத்தை வைத்து சொத்தை மீட்டிருக்கிறார் ஒரு முதியவர்.
தமிழ்நாடு மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. இதன் காரணமாக நகர்புறங்களில், நகரத்தை ஒட்டிய பகுதிகளில் நிலத்தில் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்தாலும், நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்வது அதைவிட வேகமாக அதிகரித்து வருகிறது.

நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்வதும், பட்டா வாங்க முயற்சிப்பதும் அதிகமாக நடக்கிறது. நிலத்தை வாங்கிப்போட்டு அதை கவனிக்காமல் இருப்பவர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. போலி ஆதார், போலி வாரிசு சான்றிதழ், போலி உயில் சாசனங்கள் எழுதி மோசடி செய்து பத்திரப்பதிவு செய்வது அடிக்கடி நடக்கிறது.
இப்படி நடந்த மோசடியை நிலம் வாங்கியவரே வில்லங்கம் உள்ளதா என்பதை ஆன்லைனில் ஈஸி போட்டு பார்த்தால் தான் கண்டுபிடிக்க முடியும். அவர் கவனிக்காமல் விட்டுவிட்டால், அல்லது 10 வருடம் அல்லது 15 வருடம் கழித்து பார்த்தால் அங்கு வேறு யாராவது குடியிருப்பார்கள். அவர்களை வெளியேற்ற முடியாத அளவிற்கு பத்திரம் பல கைகளுக்கு மாறி இருக்கும். இது போன்ற விலங்கங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்த 79 வயதாகும் ராதாகிருஷ்ணன் , கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம். இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்திருக்கிறார். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரிக்கை வைத்தார்.
இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முதியவர் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார்.
இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் தனது நிலத்தை முதியவர் மீட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications