தோப்புக்கு தூக்கிட்டு போனேன்.. கழுத்தை நெரித்தேன்.. சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது
10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
நாகை: "பிரியாவின் வாயை பொத்தி நான்தான் காட்டுக்குள்ளே தூக்கிட்டு போனேன்.. பலாத்காரம் செய்தேன்.. சத்தம் போடவும், அவளது தொண்டையை நெரித்து கொன்று விட்டேன்" என்று கொலை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்த சிறுமி பிரியா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஸ்கூல் விட்டு வந்த பிரியா, தோப்பு பக்கம் மாலை நேரத்தில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பயந்து போன பெற்றோர் அவளை தேடி தோப்புக்கு சென்றனர். அப்போதுதான், பிரியாவின் கழுத்து, தலை, தோள்பட்டைகளில் ரத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்தாள்.

டாக்டர்கள்
பதறி போன பெற்றோர், மகளை தூக்கி கொண்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். உடலில் ஏற்பட்ட காயங்களை வைத்து, பிரியாவை யாரேனும் பலாத்காரம் செய்து, பின்னர் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

கல்யாண சுந்தரம்
பின்னர், பிரியாவின் பக்கத்து வீட்டுக்காரர் கல்யாணம் சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். இவருக்கு 30 வயதாகிறது.. டிரைவர் வேலை பார்க்கிறார். அதில் சிறுமியை கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.

பலாத்காரம்
''ரொம்ப நாளாகவே பிரியா மீது ஒரு கண் இருந்தது. சம்பவத்தன்று சாயங்காலம், தோப்புக்கு பிரியா போவதை பார்த்தேன். நானும் பின்னாடியே வாயை பொத்தி, காட்டுப்பகுதிக்கு இழுத்துட்டு போனேன்.. அங்கதான் பிரியாவை பலாத்காரம் செய்தேன்.. அப்போ சத்தம் போட்டு கத்தவும், நான் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்" என்றார்.

வாக்குமூலம்
இதில் என்ன ஒரு கொடுமை என்றால், தோப்பில் விழுந்து கிடந்த மகளை பெற்றவர்கள் தூக்கி கொண்டு ஓடும்போது, கல்யாணசுந்தரமும் கூடவே சென்றுள்ளார். சும்மா போகாமல், "என் தங்கச்சியை இப்படி செய்துட்டாங்களே" என்று கதறி அழுது கொண்டே சென்றுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து கல்யாண சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications