நாகையில் சுற்றுலா வந்த வேன் தலைகீழ் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம்
நாகப்பட்டினம்: நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை நண்பர்களுடன் சுற்றுலா வந்த மருத்துவர் ஞானசேகரன் என்பவர் முதலுதவி அளித்து காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மருத்துவரின் செயலை பலரும் பாராட்டினார்கள்.
கொரோனா லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலர் ஆர்வமுடன் செல்கிறார்கள்.

நாகூர் தர்கா
கடலூர் மாவட்டம் லால்பேட்டை 10க்கும் மேற்பட்டோர் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் சுற்றுலா வந்தனர். நாகூர் தர்காவில் வழிபாடு முடிந்த பின்னர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றனர்.

வாய்க்கால்
அப்போது கருவேலங்கடை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகீழ் கவிழ்ந்தது.

பொதுமக்கள்
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தலைகீழாக கவிழ்ந்த வேனில் சிக்கியவர்களை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீட்டு இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
இதனிடையே விபத்து நடந்த வழியாக நண்பர்களோடு வேளாங்கண்ணி சுற்றுலா சென்ற மருத்துவர் ஞானசேகர் என்பவர் அனைவருக்கும் முதலுதவி பார்த்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பும் வரை உதவி செய்தார். இந்த நிலையில் விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications