நாகப்பட்டினம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் வெற்றி
நாகப்பட்டினம்: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் சிபிஐ கட்சியின் வேட்பாளர் வை. செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் வி செல்வராஜ் (சிபிஐ), ஜி.சுர்ஜித் சங்கர் (அதிமுக), எஸ்.ஜி.எம்.ரமேஷ் (பாஜக), கார்த்திகா (நாம் தமிழர்) உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.

இந்த நாகப்பட்டினம் தொகுதி தனித் தொகுதியாகும். இடதுசாரிகளுக்குக் கணிசமாகச் செல்வாக்கு இருக்கும் தொகுதிகளில் இந்த நாகப்பட்டினமும் ஒன்று. 2014 தவிர பெரும்பாலான தேர்தல்களில் இங்கு திமுக கூட்டணியே வென்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட செல்வராசு 5.22 லட்சம் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் சரவணனை 2.11 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.
கடந்த முறையைப் போலவே இந்த முறையும் நாகப்பட்டினம் தொகுதி திமுக கூட்டணியில் சிபிஐ கட்சிக்கே ஒதுக்கப்படாது. இந்த முறை செல்வராஜுக்கு சிபிஐ வாய்ப்பு அளித்துள்ளது. இந்த முறை அதிமுக, பாஜக தனித்தனியாகக் களமிறங்குவது சிபிஐ கட்சிக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், தொடக்கம் முதலே இடதுசாரிகள் வேட்பாளர் வை. செல்வராஜ் முன்னிலையில் இருந்தார். இதற்கிடையே இப்போது அவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராஜ் 4.7 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், அவர் 2.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்குப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுர்ஜித் 2.24 லட்சம் வாக்குகளைப் பெற்று 2ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
நாகப்பட்டினம் தொகுதியைப் பொறுத்தவரை இங்கு சிபிஐ கட்சி தான் அதிக முறை வென்றுள்ளது. சிபிஐ இங்கு 7 முறை வென்றுள்ள நிலையில், காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது.
அதேநேரம் 1999க்கு பிறகு நடந்த தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை அதாவது 2009 வரை திமுக வசமே இந்த தொகுதி இருந்தது. 2014இல் நடந்த தேர்தலில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கோபால் வென்றிருந்தார். இருப்பினும், 2019-ல் மீண்டும் இந்த தொகுதி திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ வசம் வந்தது.. இந்த முறை சிபிஐ தக்க வைக்குமா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஏகேஎஸ் விஜயன் (திமுக) - 4,63,389
பி.ஜே.அர்ச்சுனன் (அதிமுக) - 2,47,166
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஏகேஎஸ் விஜயன்( திமுக)- 3,69,915
M. செல்வராசு (சிபிஐ)- 3,21,953
எம். முத்துக்குமார் (தேமுதிக)- 51,376
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
டாக்டர் கே. கோபால் (அதிமுக)- 4,34,174
ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)- 3,28,095
ஜி. பழனிசாமி (சிபிஐ)- 90,313
வடிவேல் ராவணன் (பாமக)- 43,506
T. A. P. செந்தில்பாண்டியன் (காங்கிரஸ்) - 23,967
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
செல்வராசு (சிபிஐ)- 5,22,892
எம்.சரவணன் (அதிமுக)- 3,11,539
டி. செங்கொடி (சுயேச்சை) 70,307
பி. மாலதி (நாம் தமிழர்)- 51,448
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications