"வெளிச்சத்தில்" நாகை.. வாழைப்பழத்தை வீசிய ராதாகிருஷ்ண சாமியார்.. மலைத்த "மாப்பிள்ளை வீரன்".. சூப்பர்
நாகை: நாகையில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்று, இணையத்தில் வைரலாகி பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
விநோத திருவிழாக்கள் என்பது, நம்முடைய தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. உதாரணத்துக்கு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என்று தனித்தனியாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

பனை இலைகள்: அதேபோல, பனை இலையில் கறிசோறு போடும் திருவிழா, வாழைப்பழம் வீசும் திருவிழா, உடம்பெல்லாம் சேறு பூசி ஆடும் திருவிழா என்று இன்னும் ஏராளமான திருவிழாக்கள் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம்கூட, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியிலுள்ள பொன்னழகி அம்மன் கோயிலில் விநோத திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஹைலைட்டே சேறு பூசும் நிகழ்வுதான். இந்த கோயிலுக்கு அருகிலேயே கண்மாய் ஒன்று உள்ளது.. இந்த கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றை பூசிக் கொள்வார்கள்..
கோழி இறகு: பிறகு, மாலை அணிந்து தலையில் கோழி இறகையும் வைத்துக் கொண்டு, சாமியாடுவார்கள். கண்மாயிலிருந்து கோயில் வரை ஆடிக்கொண்டே வருவார்களாம். இதனால், கிராம மக்களுக்கு நலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
நேற்றுகூட, நாகையில் பங்குனி திருவிழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.. நாகை தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் முக்கியமாக, இந்த விழாவில், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசுவது முக்கிய நிகழ்வாக உள்ளது.
பைரவர் கோவில்: முன்னதாக, தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை சுமார் 5 கிமீ தூரத்துக்கு கொண்டு வரப்பட்டு கொண்டுவரப்பட்டது.. பிறகு பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி ஆரம்பமானது.. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து சாப்பிட்டனர்.
அதாவது, சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.. இன்று காலை நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உருவ பொம்மைகள்: கோவில் வளாகத்திலும், ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.. இதற்காக ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பிறகு, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா நிகழ்வுகள் அத்தனையும் இணையத்தில் வீடியோவாகவும் வெளிவந்து பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications