‛‛கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்’’.. நாகை மீனவர் மீது கொடூர தாக்குதல்.. கடலில் குதித்து தப்பிய 3 பேர்
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவரை தாக்கிய கடற்கொள்ளையர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளி சென்றனர். இதில் படுகாயமடைந்த மீனவரின் தலையில் 10 தையல் போடப்பட்டுள்ள நிலையில் தாக்குதலுக்கு பயந்து கடலில் குதித்த 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு செல்வது இல்லை. மாறாக பைபர் படகில் மீனவர்கள் சென்று வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம் சிறுதூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற மீனவர் தனது பைபர் படகில் கடலுக்கு சென்றார். அவருடன் அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகவேல், சின்னயன், முத்துவேல் ஆகியோரும் சென்றனர்.
இவர்கள் 4 பேரும் கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிக்கல் தொலைவில் பைபர் படகில் மீன்பிடித்து கொண்டனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் படகில் வந்தனர். அவர்கள் கத்தி, கட்டையை எடுத்து உடனடியாக முருகன் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததால் மற்ற 3 மீனவர்களும் பயந்துபோய் கடலில் குதித்து நீந்தி தப்பினர்.
கொள்ளையர்களிடம் சிக்கிய முருகன் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் பைபர் படகில் மயங்கினார். இதையடுத்து அந்த கும்பல் பைபர் படகில் இருந்த வலை, செல்போன், ஜிபிஎஸ் கருவி என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றது.
இதற்கிடையே தண்ணீரில் குதித்து நீச்சலடித்த 3 மீனவர்களும் 45 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் பைபர் படகுக்கு வந்தனர். அவர்கள் படுகாயமடைந்த முருகனை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்த முருகனுக்கு 10 தையல் போடப்பட்டுள்ளது. அதோடு கையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கும் கட்டுப்போடப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளார்.
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவரை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications