நாங்க இந்து சேனா.. மோடி கட்சி.. கல்லூரியில் டொனேசன் கேட்டு மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு தகராறு செய்த இந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டு இந்து சேனா கட்சி நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கல்லூரிக்குள் நுழைந்த அவர்கள் நன்கொடை கேட்டதற்கு இதே பெயரில் நன்கொடை கேட்டு பலர் வருவதால் நன்கொடை வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். மேற்கு மாவட்டத்தில் இருந்து வந்து இங்கு நன்கொடை கேட்கிறீர்கள். கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வரச் சொல்லுங்கள் என கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
அப்போது நாங்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், நரேந்திர மோடி கட்சிக்காரர்கள், எங்களுக்கு பணமில்லையா, முதலில் 'ஜி' என சொல்லுங்கள் என மிரட்டும் தொனியில் அவர்கள் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்து சேனா அமைப்பினர் எவ்வளவு கேட்டும் கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை வழங்க மறுத்ததால் கத்திப் பேசியவாறே மூவரும் காரில் ஏறி அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில், நன்கொடை கேட்டு மிரட்டுவதாக, இந்து சேனா அமைப்பினர் மீது கல்லூரி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், தனியார் கல்லூரிக்குள் நுழைந்து பணம் கேட்டு மிரட்டிய புகாரில் இந்து சேனா நிர்வாகி பிரதீப்குமார், பிரதீஷ், மூர்த்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications