Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடபுடல் ரிசப்ஷன்.. பூரிப்பில் மணமகன்.. மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் பரபரப்பு..குமரியில்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: ரகசிய திருமணம் செய்ததை மறைத்து, பெற்றோரின் விருப்பத்திற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பிய மனைவியின் திருமணத்தை மார்த்தாண்டத்தில் போலீஸ் உதவியுடன் கணவர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவென்னி பகுதியை சேர்ந்தவர் 22 வயதான ஷாமிலி இவர் பெங்களூரில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது பெங்களூரில் என்ஜினீயராக பணிபுரிந்த தர்மபுரியை சேர்ந்த 25 வயதான ராஜூ என்ற வாலிபருடன் காதல் உருவானது.

இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ரகசிய திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள்ளும் நுழைந்துள்ளனர்.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

பின்னர் கொரோனா ஊரடங்குக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஷாமிலி கொரோனா ஊரடங்கால் மீண்டும் பெங்களூருவுக்கு செல்ல இடைஞ்சல் ஏற்பட்டது. தனக்கு திருமணம் நடந்ததை பெற்றோருக்கு தெரிவிக்காததால் ஊரில் இருந்த அவருக்கு திருமண வரன் பார்க்க துவங்கிய பெற்றோர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது.

ஏற்றுக்கொண்ட ஷாம்லி

ஏற்றுக்கொண்ட ஷாம்லி

பெற்றோரின் வலியுறுத்தலால் வேறு வழியின்றி ஷாமிலியும் சம்மதித்து விட்டார் இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணத்தை எந்த தேதியில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு தடபுடலாக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்தனர். திருமணத்தை நேற்றும் வரவேற்பு நிகழ்ச்சி அதற்கு முந்தைய நாளும் நடைபெறுவதாக பத்திரிக்கை அடித்து இரு வீட்டாரும் உறவினர்களுக்கு கொடுத்தனர்

நேரில் வந்த கணவன்

நேரில் வந்த கணவன்

அதன்படி திருமண வரவேற்பு நேற்று முன்தினம் மார்த்தாண்டத்தில் நடந்தது நேற்று நடைபெற்ற திருமணத்தில் மணமகளும் மணமகனும் புத்தாடை அணிந்து உற்சாகத்தில் திழைத்தனர் அப்போது அங்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் மணமகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாகவும் அவருடைய கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்

ஒப்புக்கொண்ட நர்ஸ்

ஒப்புக்கொண்ட நர்ஸ்

இதனை கேட்ட மணமகன் அதிர்ச்சியடைந்தார். இதனால் கலகலப்பாக இருந்த திருமண நிகழ்ச்சி களையிழந்தது. தொடர்ந்து மணமகளை மார்த்தாண்டம் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர் இதில் ரகசிய திருமணம் செய்த விவகாரத்தை ஷாமிலி ஒப்பு கொண்டார்.

நர்ஸ் செயலால் பரபரப்பு

நர்ஸ் செயலால் பரபரப்பு

பின்னர் போலீசார் என்ஜினீயர் ராஜூவுடன் திருமண பெண்ணை அனுப்பி வைத்தனர். முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த செவிலியாரின் இந்த செயல் அப்பகுதியில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+