நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் கதையில் நான் தான் ஹீரோ.. தடாலடி எடப்பாடி! கப்சிப் ஓபிஎஸ்..திரும்பி பார்த்த பாஜக! பறந்த புகார்!

Google Oneindia Tamil News

நாமக்கல் : அதிமுகவில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு முடிவெடுக்கும் அதிகாரம் தனக்குத் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசியதாகவும், தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கலாம் என நினைத்திருந்த பாஜக தலைவர்கள் இதனால் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் ஓபிஎஸ்ஸை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க முடியுமா என ஆலோசனை வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நாமக்கலில் நடைபெற்ற அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

கட்சியில் சரியும் செல்வாக்கு காரணமாக பொதுவெளிகளில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை நாமக்கல் தங்கமணி அவருக்கும் சமூக உறவு இல்லை எனவும் கூறப்பட்டு வந்த தகவல்களை பொய்யாக்கும் வகையில் இந்த கூட்டமானது நடைபெற்று இருந்தது.

டிவி-ல பார்ப்பாரு ஸ்டாலின்.. 'இப்ப தெரியுதா? எங்க டீம் ரெடி’ ஓவரா சீண்டிய எடப்பாடி.. டென்ஷனான திமுக! டிவி-ல பார்ப்பாரு ஸ்டாலின்.. 'இப்ப தெரியுதா? எங்க டீம் ரெடி’ ஓவரா சீண்டிய எடப்பாடி.. டென்ஷனான திமுக!

நாமக்கல் பொதுக்கூட்டம்

நாமக்கல் பொதுக்கூட்டம்

கிட்டத்தட்ட மாநாடு போல தங்கமணி இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் நாமக்கல் மட்டுமல்ல,, அதற்கருகில் உள்ள கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதிமுக தலைமை இனி நான் தான் என்பதை ஆணித்தனமாக பறைசாற்றும் வகையிலேயே எடப்பாடி பேச்சு அமைந்திருந்தது. கூட்டத்தில் கட்சிக்கு துரோகம் செய்ததாக ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்ததோடு ஸ்டாலினின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என ஆவேசமாக பேசினார்.

தடாலடி எடப்பாடி

தடாலடி எடப்பாடி

எடப்பாடி இதனை மேடையில் இருந்த மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும், கூட்டத்தில் பங்கேற்று இருந்த தொண்டர்களும் கைதட்டி வரவேற்றனர். எடப்பாடி பேச்சில் மற்றொரு முக்கிய அம்சமும் இடம்பெற்று இருந்தது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெருவெற்றி பெறுவார்கள் எனவும் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமைக்கப்படும் என கூறியிருந்தார். தேசிய அளவில் மற்ற மாநிலங்களில் பாஜகவே கூட்டணிக்கு தலைமை வகித்து வரும் நிலையில் கடந்த முறை தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைத்தது.

 பாஜக அதிர்ச்சி

பாஜக அதிர்ச்சி

பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத தமிழகத்தில் அதிமுகவை நம்பி இருக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் நான்கு உறுப்பினர்களை வென்ற பாஜக நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 5 எம்பிக்களையாவது பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அக்கட்சிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லாத நிலையில் கன்னியாகுமரி தவிர பிற மாவட்டங்களில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே ஒற்றை தலைமை விவாகரத்தில் அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு வரும் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு ஆப்ரேசன்கள்

சிறப்பு ஆப்ரேசன்கள்

இதனால் இது தரப்பையும் ஒன்று சேர வேண்டும் என பாஜக தலைமை கருதுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களது தலைமையில் தான் கூட்டணி என பாஜகவுக்கு இரு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மட்டுமல்லாது பாஜக தலைமையும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது பாஜக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாகவும் ஓ.பன்னீர் செல்வத்தை வைத்து அவருக்கு நெருக்கடியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் சில 'ஸ்பெஷல் ஆப்ரேஷன்களும்' நடக்கலாம் என்கின்றனர் டெல்லி அரசியல் நிபுணர்கள். வரும் காலங்களில் அரசியல் களம் மேலும் சூடு பிடிக்கும் எனவும் உறுதியாக கூறுகின்றனர்.

English summary
It is said that Edappadi Palaniswami spoke at a meeting in Namakkal yesterday to prove that he has the authority to take decisions after MGR Jayalalithaa in the AIADMK. BJP leaders who thought they could form an alliance under their leadership are very dissatisfied with this, and it is being suggested that Edappadi can put pressure on Edappadi by using OPS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X