அண்ணன் -தங்கைக்கு தசைச் சிதைவு நோய்! 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கை! திமுக MPயின் மனிதநேயம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே ஒரே வீட்டில் அண்ணனும் தங்கையும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுத்ததுடன், கட்டுமான பணிகளுக்காக தனது ஊதியத்திலிருந்து ரூ.2 லட்சத்தை கொடுத்திருக்கிறார் திமுக ராஜ்யசபா உறுப்பினர் ராஜேஷ்குமார்.
தசைச் சிதைவு நோய் என்பது கொடூரத்திலும் கொடூரமானது. ஆளை மெல்ல மெல்ல கொல்லும் இந்த நோயின் பிடியில் சிக்கிக் கொண்டவர்கள் நாளடைவில் நடையின்றி படுத்த படுக்கையாக கிடக்க நேரிடுவார்கள். உதவ ஆளின்றி அவர்களால் வாழவே முடியாது என்ற சூழல் உருவாகும்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் மற்றும் மகள் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சொந்த வீடு இல்லாமல் தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார் தங்கபாண்டியன்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி பாதிக்கப்பட்ட இருவரையும் சந்தித்து நலம் விசாரித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையை வழங்கினார். அதுமட்டுமல்ல பட்ட வழங்கிய 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு, பட்டா வழங்கப்பட்ட இடமான பேட்டபாளையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 430 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் பணிகளையும் ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

மேலும், வீடு கட்டும் பணிக்காக மாநிலங்களவை உறுப்பினருக்கான தனது மாத ஊதியத்திலிருந்து ரூ.2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் ராஜேஷ்குமார் எம்.பி. உடல்நலமில்லாத 2 பிள்ளைகளை வைத்துக்கொண்டு இனியும் இன்னொரு வாடகை வீட்டிற்கு மாறி பெற்றோர் சிரமப்படக் கூடாது என்பதால் தான் இந்த விவகாரத்தில் இவ்வளவு வேகம் காட்டப்பட்டிருக்கிறது.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications