அண்ணே அது உண்மையாண்ணே? ஃபோன் மேல ஃபோன் போட்டாங்க! ஓபனாய் பேசிய தங்கமணி! என்னாச்சு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பொதுச்செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக தடை விதித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி ஓபிஎஸ் தவறான கருத்துகளை பரப்பி வருவதாகவும், இது தொடர்பாக பலர் தன்னிடம் பேசி வருவதாகக் கூறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான தங்கமணி.

அதிமுகவின் ஒற்றை தலைமையான முன்னாள் முதல்வர் மற்றும் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இரு அணிகளாகப் பிரிந்து இருந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்தனர்.

ஆட்சிக்குத் தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு அப்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருந்த நிலையில் துணை முதல்வர் பதவி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவரையே தற்போது கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.

அதிமுகவில் மோதல்

அதிமுகவில் மோதல்

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு மற்றும் ஓபிஎஸ் தொடரும் அனைத்து மேல் முறையீடு வழக்குகளும் இபிஎஸ்க்கு சாதகவே அமைந்து வருவதை பார்க்க முடிகிறது. ஓபிஎஸ் பொதுக்குழுவை நாடாமல் அனைத்திற்கும் நீதிமன்றத்தை நடுவது சரி அல்ல என்றும், உயர்நீதிமன்றம் கூறி இருக்கும் நிலையில், சட்ட போராட்டங்கள் ஓபிஎஸ்க்கு கை கொடுக்குமா என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

பொதுக்குழு வழக்கு

பொதுக்குழு வழக்கு

இந்நிலையில் தான் ஒரு சிறு ஆறுதலாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்த முயன்று வருவதாகவும், எனவே வழக்கு விசாரணையில் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

இபிஎஸ் தரப்பு

இபிஎஸ் தரப்பு

இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இபிஎஸ் தரப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சற்றே பின்னடைவை சந்தித்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசி வருகின்றனர். ஆனால் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இது தங்கள் தரப்புக்கு கிடைத்த வெற்றி எனவும், இது தடை வரை தொடரும் என பரப்பி வருகின்றனர். மேலும் இதனை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதனை அறித்த இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

பொது செயலாளர் தேர்தலுக்கு தடை

பொது செயலாளர் தேர்தலுக்கு தடை

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டங்களை அறிந்துள்ள இபிஎஸ் தரப்பு அதிருப்தி அடைந்துள்ள நிலையில், பலரும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டு வருகின்றனர். இதனையடுத்து தாங்கள்தான் தேர்தலை நடத்த மாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு பொய் தகவல்களை பரப்பி வருவதாக கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமான நாமக்கல் தங்கமணி. இது தொடர்பாக அதிமுக கூட்டத்தில் பேசிய அவர்," உச்ச நீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை வழக்குகள் முடிந்த பிறகு நடத்துகிறோம் என தெரிவித்திருக்கிறோம். ஆனால் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து விட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

தங்கமணி விளக்கம்

தங்கமணி விளக்கம்

திமுகவின் தூண்டுதலின் பேரில் சில பத்திரிகைகளும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை என தகவல் பரப்பி வருகின்றன. எனக்கு நிறைய பேர் போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த தவறான செய்திகளுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சட்டரீதியாக வெற்றி பெற்று பொது செயலாளர் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆக்குவோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என விளக்கி இருக்கிறார். அதாவது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவி விடலாமா என பலர் யோசித்து வரும் நிலையில், அப்படி யாரும் செல்ல வேண்டாம் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு தான் சாதகமாக வரும் எனவே அணிமாறாதீர்கள் என நாமக்கல் தங்கமணி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார் என்கின்றனர் எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+