சங்கீதாவுக்கு ஆட்டோவில் பூத்த கள்ளக்காதல்.. நாமக்கல் தாய்க்கு மறக்க முடியாத பரிசு தந்த 17 வயது மகன்
நாமக்கல்: கள்ளக்காதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, குடும்பங்களிலும் சமூகத்திலும் கடும் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. சந்தேகம், அவமதிப்பு, பழிவாங்கும் மனநிலை ஆகியவை இவ்வாறான உறவுகளை வன்முறையாக மாற்றுகின்றன.. உறவுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தலையீடுகள் இல்லாவிட்டால், இத்தகைய சம்பவங்கள் உயிரிழப்பில் முடியும் அபாயம் அதிகம் என்பதை இங்கு நாம் வலியுறுத்த வேண்டி உள்ளது.. இதோ இந்த நாமக்கல் சம்பவத்தை பாருங்க
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியைச் சேர்ந்தவர் கதிரவன். இவருக்கு 42 வயதாகிறது.. ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவர் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கோடாரியால் கதிரவனின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

நாமக்கல் சிறுவன்
ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்துக் கொண்டிருந்த கதிரவனைக் கண்ட அவரது அம்மா ஜானகி, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த கதிரவன், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கண்ட சம்பவங்கள் எல்லாமே அடுத்தடுத்த நிமிடங்களில் நடந்து முடிந்த நிலையில் நாமக்கல்லே அதிர்ந்து போய் கிடக்கிறது.. என்னதான் நடந்தது?
சங்கீதா கள்ளக்காதல்
பேளுக்குறிச்சி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் கதிரவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் முறைகேடான உறவில் முடிந்துள்ளது... சங்கீதாவுக்கு 33 வயதாகிறது.. ஏற்கனவே திருமணமானவர் சங்கீதா.. 17 வயதில் மகன் இருக்கிறார்..
ஒருகட்டத்தில் இந்த கள்ள உறவு, மகனுக்கம் தெரியவந்துள்ளது... இதனால் ஆத்திரமடைந்த அவர், தகாத உறவை கைவிடும்படி தாயை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தொடர்பை கைவிடவில்லை... நேற்று முன் தினமும் கதிரவன் சங்கீதா வீட்டிற்கு கதிரவன் சென்றுள்ளார்.. அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.. அப்போது, வீட்டிற்கு வந்த சங்கீதாவின் மகன், இதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆட்டோ டிரைவர் - 17 வயது மகன்
பலமுறை கண்டித்தும், ஆட்டோ டிரைவருடனான உறவை கைவிடாததுடன், தன்னுடைய வீட்டிற்கே வந்து அம்மாவுடன் உல்லாசமாக இருந்ததால் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்தான் சிறுவன்...
உடனே வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து கதிரவனை தாக்க முயன்றார். இதனால் பயந்து போன கதிரவன், அங்கிருந்து எகிறி தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார்.. ஆனாலும் சிறுவன் விடாமல், ஆவேசத்துடன் ஆட்டோ டிரைவரை துரத்தி கொண்டே வந்தான்.. ஒருகட்டத்தில் ஆட்டோ டிரைவரால் ஓட முடியாமல் திணறியபோது, சிறுவன் கோடாரியாலேயே அவரை சரமாரியாக வெட்டினார்.. இதில் படுகாயமடைந்த கதிரவன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

மயங்கிய ஜானகி அம்மா
கதிரவனை சிறுவன் விரட்டி கொண்டே வந்து சரமாரியாக வெட்டி சாய்ப்பதை, கதிரவனின் அம்மா ஜானகி அதிர்ச்சி அடைந்தார்.. 65 வயதான தாயின் கண்ணெதிரே மகன் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்....
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கதிரவனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்... உயிரிழந்த ஜானகி அம்மாவின் சடலத்தை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications