நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாத்திகவாதி கருணாநிதிக்கு கோவில்! 3 ஆண்டுக்கு முன்பே பணியை துவக்கிய கிராமம்! எங்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாத்திகவாதியாக அறியப்படும் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு நாமக்கல் மாவட்டத்தில் கோவில் கட்டும் பணி 3 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது.

Recommended Video

    Tribute to Kalaignar Karunanidhi | 4th year memorial | Oneindia Tamil

    தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக பொறுப்பு வகித்த பெரும் ஆளுமை கருணாநிதி. இவர் திமுகவின் தலைவராக 1969ம் ஆண்டு முதல் 2018 வரை செயல்பட்டு வந்தார். கருணாநிதி அரசியல் மட்டுமின்றி இலக்கியம், சினிமா என பல்துறைகளில் சாதித்து காட்டிய கருணாநிதி அரசியல் மூலம் அடிமட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதித்து காட்டியுள்ளார்.

    பிற மாநிலங்களை ஒப்பிடும்போது பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதற்கு கருணாநிதியின் பங்கு முக்கியமானதாகும். குறிப்பாக நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க் தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது.

    மசூதி, சர்ச் முன்பு பெரியார் சிலை எங்கே.. கஸ்தூரி கேட்ட கேள்விக்கு திமுக எம்பி சுளீர் பதில் மசூதி, சர்ச் முன்பு பெரியார் சிலை எங்கே.. கஸ்தூரி கேட்ட கேள்விக்கு திமுக எம்பி சுளீர் பதில்

    4ம் ஆண்டு நினைவு தினம்

    4ம் ஆண்டு நினைவு தினம்

    இந்நிலையில் தான் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி காலமானார். அவரது 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். திருவாரூரில் உள்ள கருணாநிதி இல்லம் இதயவடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி, அமைதி பேரணி நடைபெற்றது. மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முக ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    நாத்திகவாதி கருணாநிதிக்கு

    நாத்திகவாதி கருணாநிதிக்கு

    அடிப்படையில் நாத்திகவாதியாக அறியப்படும் கருணாநிதி, கோவில் புனரமைப்பு, கும்பாபி ேஷகம் உள்ளிட்டவற்றை தனது ஆட்சிக்காலத்தில் நடத்தி காட்டினார். இந்நிலையில் தான் நாத்திகவாதியான கருணாநிதிக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் கட்டப்பட்டு வரும் ஆச்சரியான தகவல் பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

    கருணாநிதிக்கு கோவில்

    கருணாநிதிக்கு கோவில்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குச்சிக்காடு எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, ‘கலைஞர் பகுத்தறிவாலயம்' என்ற பெயரில் கோவில் கட்ட கிராம மக்கள் திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு பூமிபூஜை போடப்பட்டது. இதற்காக கருணாநிதி கோவிலுக்காக பிரத்யேக கட்டடம் வடிவமைக்கப்பட்டு பணி துவங்கியது.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    குச்சிக்காடு கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2008-2009 காலக்கட்டத்தில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கினார். இதனால் பட்டியல் பிரிவில் உள்ள அருந்தியர் பிரிவு மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இதனை கொண்டாடும் வகையிலும், கருணாநிதியை போற்றும் வகையிலும் குச்சிக்காடு கிராமத்தில் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு பணி துவங்கப்பட்டது. அதோடு பூமிபூஜையின்போது வைக்கப்பட்ட பேனரில் ‛‛பட்டியல் சமூக ஒதுக்கீட்டில் அருந்ததிியர்களுக்கு 3 சதவீத தனி ஒதுக்கீடு அளித்த எங்கள் குல தெய்வம்'' என எழுதப்பட்டு இருந்தது.

    பாதியில் நிற்கும் பணி

    பாதியில் நிற்கும் பணி

    மேலும் அன்பின் வெளிப்பாடாக கட்டப்படும் இந்த கோவிலில் கருணாநிதியின் உருவச்சிலை, நூலகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். அதோடு இந்த கோவில் கட்டுவதற்கான நிதியை அருந்ததியர் சமூக பிரிவு மக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் திரட்டப்பட்டது. பணிகள் துவங்கி நடைபெற்ற நிலையில் கட்டுமான பணி கைவிடப்பட்டுள்ளது. கருணாநிதி கொண்டு வந்த தனி ஒதுக்கீட்டால் பயன்பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்வமாக இருந்தபோதும் போதிய ஆதரவு இல்லாததால் இந்த கட்டுமான பணி பாதியில் நிற்பதாக கூறப்படுகிறது.

    English summary
    The construction of a temple in Namakkal district for the late former chief minister and DMK leader Karunanidhi, who is known as an atheist, started 3 years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X