“அம்மா.. அட்ரஸ் சொல்லுங்க”.. 8.5 பவுன் செயின் அபேஸ்.. 12 மணி நேரத்தில் சிக்கிய 2 பேர்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விலசத்தை விசாரிப்போது போல பேசி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஏளூர் பகுதியைச் சேர்ந்தவர் தனம் (68). கடந்த 2 ஆம் தேதி மாலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், அவரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து, கழுத்தில் அணிந்திருந்த 8.5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

Namakkal Youths Steal 8 5 Sovereign Gold Chain from Elderly Woman

அடகு வைக்க முயற்சி

இதுகுறித்து தனம் அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், செயினைப் பறித்துச் சென்ற இளைஞர்கள் நகையை அடகு வைக்க முயன்றது தெரியவந்தது.

இருவர் கைது

இதையடுத்து, செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த கௌஷிக் (24), பரமத்தி வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.5 பவுன் தங்கச் செயின் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இருவரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் 12 மணி நேரத்திற்குள் காவல்
துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+