இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ஆபிசர்ஸ்.. அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட விநோத தார் சாலையை பாருங்க
நாமக்கல்: தமிழக அரசுக்கு ஏணிபோல் இருந்து அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் ஒரு சில அரசு ஊழியர்கள் ஏதோ வேண்டாத வெறுப்பாக மக்களுக்கு பணி செய்வது வழக்கம்.
இந்த வார்த்தையை உறுதிபடுத்துவதுபோல் கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசு ஊழியர்கள் செய்த செயல்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

செயல்படாத அடிபம்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், 8-வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே ராசிபுரம் - புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்பு ஒன்று உள்ளது
இதனை இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அடிபம்பு செயல்படவில்லை. ராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டு குழியுமாக இருந்தன.

கேவலமான உலக சாதனை
தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் தற்போது புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 8வது வார்டில் உள்ள அடிபம்பை அகற்றாமல் அதனை சுற்றி அப்படியே தார் சாலை அமைத்து கேவலமான உலக சாதனை படைத்துள்ளனர் ராசிபுரம் நகராட்சி அதிகாரிகள்.

கொஞ்சம் கூட யோசிக்கவில்லை
ஒன்று அந்த அடிபம்பை சரிபார்த்து மக்கள் பயன்படும் வகையில் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் பழுதடைந்த அடிபம்பை அங்கு இருந்து அகற்றி இருக்க வேண்டும். ஆனால் இது இரண்டையும் செய்யாமல் கொஞ்சம் கூட யோசிக்காமல் மெத்தன போக்குடன் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்துள்ள அதிகாரிகளை என்னவென்று சொல்வது?

வினோதமான தார் சாலை
இப்படிப்பட்ட வினோதமான தார் சாலையை அமைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அடிபம்பை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் அல்லது அதனை அகற்ற வேண்டும். வீணாக பொதுமக்களின் வரிப்பணத்தை விரையம் செய்யக்கூடது என கோரிக்கை எழுந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் அமைத்த இந்த சாலை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications