Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லில் ஷவர்மா விற்க மீண்டும் அனுமதி.. மூன்றே வாரத்தில் தடையை நீக்கியது மாவட்ட நிர்வாகம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ஷவர்மா சாப்பிட்டதால் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நாமக்கல்லில் ஷவர்மா விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் உணவகங்களில் ஷவர்மா விற்க அனுமதியளித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார். தவக்குமார் மகள் கலையரசிக்காக பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கியுள்ளார். இதே போல நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக அதே உணவகத்தில் ஷவர்மா வாங்கியதாக தெரிகிறது.

Restaurants in Namakkal district allowed to sell shawarma, Department of Food Safety

இந்த நிலையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட தவக்குமாரின் 14 வயது மகள் கலையரசி மற்றும் அவரது அம்மா சுஜாதா, அத்தை கவிதா, மாமா பூபதி, மாமன் மகள் சுனோஜி ஆகியோருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலையரசி மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சூழலில் கடந்த மாதம் 18ம் தேதி மாணவி கலையரசி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், சவர்மா சாப்பிட்ட 17 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உணவகத்தை சோதனையிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் நாமக்கல் மாவட்டங்களில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாமக்கல்லில் உணவகங்களில் ஷவர்மா விற்க அனுமதியளித்து உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை கூறுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் உணவகங்களில் ஷவர்மா விற்க அனுமதியளிக்கப்படுகிறது. கிரில், தந்தூரி போன்ற உணவு வகைகளை விற்பனை செய்யலாம்" என்று கூறியுள்ளது. மேலும், இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து விற்க கூடாது என்றும், உணவுகளில் ரசாயனம் சேர்க்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+