திமுக, பாஜகவை தவிர யார் வேண்டுமானாலும் தவெகவுடன் கூட்டணிக்கு வரலாம்! இதென்ன லாஜிக் அருண்ராஜ்?
நாமக்கல்: திமுக, பாஜகவை தவிர வேறு எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் அக்கட்சிகளை தமிழக வெற்றிக் கழகம் அரவணைத்துச் செல்லும் என தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக கூட்டணிக்கு வந்தாலும் "நோ" தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக்கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், எஸ்ஐஆர் படிவங்களில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்கும் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். அடுத்த மக்கள் சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அருண்ராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்றார். அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று, நடிகர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்து, விஜயே முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
தங்கள் அரசியல் எதிரிகள் யார் என்பது தெளிவாகிவிட்டதாகவும், தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அருண்ராஜ் விளக்கினார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையையும், நடிகர் விஜயை முதல்வராகவும் ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டும்தான் கூட்டணி அமையும். திமுகவையும், பா.ஜ.க.வையும் தவிர்த்து மற்ற கட்சிகள் அனைவரையும் அரவணைப்போம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடனே கூட்டணி என அருண்ராஜ் சொல்லியிருக்கும் நிலையில் அதிமுகவுடன் அவர்கள் கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பிருக்காது என்றே தெரிகிறது. தவெக- காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு அதற்கு உரிய நேரத்தில் அறிவிப்பு வரும். கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும். கூட்டணி குறித்து முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் குழு அமைக்கப்படும்.
அந்த குழுவை விஜய் விரைவில் அறிவிப்பார். தவெக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி அமையும். அந்த கூட்டணி தேர்தலில் வென்று விஜய் முதல்வராக பதவியேற்பார். இவ்வாறு அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி என்ற செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை! எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்! அப்படியிருக்கும் போது பாஜகவுடன் அருண்ராஜ் கூட்டணி இல்லை என சொல்லியிருக்கிறார்.! இதற்கு அவர் நேரடியாக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. லாஜிக்கும் இல்லாமல் உள்ளது.
தவெக அருண்ராஜ் இந்திய வருவாய் துறை அதிகாரி. இவர் வருமான வரித் துறையில் அதிகாரியாக இருந்தார். விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்த போது இவர்தான் அதிகாரியாக இருந்தார். அப்போது அந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்தும் வைத்தார்.
இதனால் விஜய், அருண்ராஜ் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது கூட விஜய் அவரை அப்படியே அரவணைத்துக் கொண்டார். வரும் தேர்தலில் அருண்ராஜ் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications