சிட்டிங் எம்பி சின்ராஜு மாற்றம்.. நாமக்கல் வேட்பாளராக சூரியமூர்த்தி போட்டி.. கொமதேக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: திமுக கூட்டணியில் நாமக்கல் லோக்சபா தொகுதியில் மீண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் நிலையில் சிட்டிங் எம்பி சின்ராஜூவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாறாக சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜுன் மாதம் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Who is the candidate for Namakkal Lok Sabha constituency Kongunadu Makkal Desiya Katchi announces today

தமிழ்நாடு, புதுச்சேரியை பொறுத்தமட்டில் முதற்கட்டமாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் 19 ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதி + புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் லோக்சபா தொகுதி மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதி ஏற்கனவே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் ஏகேபி சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் நாமக்கல் தொகுதி அந்த கட்சிக்கே திமுக தலைமை வழங்கி உள்ளது. இந்த தொகுதி ஒப்பந்தம் கடந்த மாதம் 24ம் தேதி கையெழுத்தானது.

ஆனாலும் கூட நாமக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. தற்போது அங்கு அந்த கட்சியின் சிட்டிங் எம்பியாக சின்ராஜ் உள்ளார். இவர் வரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் சின்ராஜுக்கு பதில் நாமக்கல் தொகுதி வேட்பாளரை புதுமுகத்துக்கு அந்த கட்சி வாய்ப்பளிக்கலாம் என்ற தகவல் வெளியானது.

இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈஸ்வரன் ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தார். அதன்படி நாமக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பெயரை இன்று கொங்கு ஈஸ்வரன் அறிவித்தார்.

இன்று மாலையில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அதன்படி நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+