ஆட்டு கொட்டகைக்குள்.. நடுராத்திரி சிக்கிய கள்ளஜோடி.. ஒன்று திரண்ட ஊர்மக்கள்.. அதுவும் டெம்போவில்?
ஆடுகளை திருடிய கள்ளக்காதல் ஜோடி கைதாகி உள்ளனர்
நாமக்கல்: ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து ஜோடி செய்த காரியத்தால், ஊரே அதிர்ந்து போய்விட்டது.. இறுதியில் கையும் களவுமாக சிக்கி ஜெயிலுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர்.
சமீப காலமாகவே நாமக்கல் மாவட்டத்தில் ஆடுகள் திருட்டு நிறைய நடந்து வருகிறது.. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்..
ஆனால், விவசாயம் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைப்பதால் கால்நடை வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கால்நடைகள்
அந்த வகையில், வீடுகளிலேயே ஆடு, மாடுகளை வளர்த்து, அவைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று பராமரித்தும் வருகிறார்கள்.. கொட்டகைகளில் ஆடு, மாடுகளை பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், திடீர் திடீரென அவைகள் காணாமல் போவது தொடர்கதையாகி விடுகிறது.. வெளிமாவட்டங்களில் இருந்து, கிராமங்களுக்குள் சிலர் வந்து ஆடுகள் உள்ள கொட்டகைகளில் நோட்டம் போட்டுவிட்டு வருவதும், பிறகு இரவு நேரங்களில் அவைகளை திருடி கொண்டு போவதும் நடந்து வருகிறது.

குமாரபாளையம்
அந்தவகையில்தான் மீண்டும் ஒரு சம்பவம் குமாரபாளையத்தில் நடந்துள்ளது.. இங்குள்ள வீரப்பம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

ஆடுகளை காணோம்
சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் வசிக்கும் வெங்கட் ராஜ் என்பவர் வீட்டில் 2 ஆட்டு குட்டிகள் காணாமல் போயுள்ளன... வெங்கட்ராஜுக்கு 53 வயதாகிறது.. நாடா உற்பத்தி தொழில் செய்கிறார்.. இவரும், இவரது மகள் பவித்ராவும் இரவு 09:00 மணிக்கு தூங்க சென்றுள்ளனர்... ராமேஸ்வரம், திருசெந்தூர் சென்று வீடு திரும்பிய வெங்கட்ராஜ் மனைவி, மகன் இரவு 11:00 மணியளவில் பார்த்த போது, வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை காணவில்லை.

ஆடுகள்
ஊர் பொதுமக்கள் சேர்ந்து தேடி பார்த்தபோது, கத்தேரி பிரிவு பகுதியில் சந்தேகப்படும்படி டெம்போ ஒன்று நிற்பதை கண்டு, அங்கு சென்று பார்த்தனர்.. அப்போதுதான் காணாமல் போன ஆடுகள் இரண்டும் டாட்டா ஏசி வாகனத்தில் இருந்ததை கண்டுபிடித்தனர்.. அந்த டெம்போவில் இருந்த ஆண், பெண் இருவரையும் கையும் களவுமாக போலீசிலும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.. மேலும் டாட்டா ஏசி வாகனத்தையும் ஒப்படைத்தனர்.

கள்ளக்காதல் ஜோடி
ஒப்படைக்கப்பட்ட 2 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அவர்கள் பெயர் மோகன், மேகலா என்பதாகும்.. இருவருமே கள்ளக்காதல் ஜோடிகளாம்.. அவர்களிடம் இருந்து டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

கும்பாபிஷேகம்
சில நாட்களுக்கு முன்பு இதே ஊரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஒன்று சேர்ந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர் சென்றனர். பெரும்பாலோனோர் யாத்திரை சென்றதை அறிந்துதான் இந்த கள்ளக்காதல் ஜோடி ஊருக்குள் புகுந்து வேலையை காட்டியதாக கூறப்படுகிறது. எனவே, வேறு பகுதிகளிலும் இப்படி ஆடுகள் திருடு போயுள்ளதா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications