அடுத்த வாரம் ஊருக்கு வர வேண்டியவர்.. திருடனால் கொல்லப்பட்ட கொடூரம்.. அமெரிக்காவில் இந்தியர் பலி!
அமெரிக்காவில் சுனில் எட்லா என்று 61 வயது இந்திய நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் சுனில் எட்லா என்று 61 வயது இந்திய நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட சுனில் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் நியூ ஜெர்சியில் வசித்து வந்தார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 15ம் தேதி நடந்துள்ளது. ஆனால் இன்றுதான் இதுகுறித்து இந்திய மீடியாக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்சனை
சுனில் மருத்துவமனை ஒன்றில் இரவு நேர ஆடிட்டராக இருந்துள்ளார். அவர் கடந்த வாரம் பணிக்காக இரவில் செல்லும் நேரத்தில் 16 வயது இளைஞன் ஒருவன் காரை மறித்துள்ளான். துப்பாக்கியை காட்டி அவரை காரைவிட்டு இறங்க சொல்லியுள்ளான்.

கொன்றான்
இதையடுத்து காரைவிட்டு இறங்கியவரை துப்பாக்கி முனையில் நிறுத்திவிட்டு, காரை எடுத்து இருக்கிறான். ஆனால் புறப்படும் முன் சுனிலை சுட்டுவிட்டு சென்றுள்ளான். இதில் சுனில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளான்
இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்களாக திருடன் தேடப்பட்டு வந்தான். இதையடுத்து திருடன் நேற்று இரவு போலீசால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது.

இந்தியா வர இருந்தார்
இவர் அடுத்த வாரம் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸை கொண்டாட திட்டமிட்டு இருந்தார். இதற்காக இந்தியா வர டிக்கெட் எடுத்து இருந்தவர், இரண்டு மாத விடுப்பும் எடுத்து இருந்தார். இவர் 1987ல் அமெரிக்காவிற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications