தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 வயது குழந்தை.. ஃஸூம் மீட்டிங்கில் ஷாக் சம்பவம்.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவில் 3 வயது குழந்தை ஒன்று தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு விபத்துகள் நடப்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக குழந்தைகள், சிறுவர்கள் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டு காயங்களை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது.
துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் இருப்பது அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் சட்டப்படி மிகப்பெரிய குற்றம் ஆகும்.

துப்பாக்கி சூடு
இந்த நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சமயா லின் என்ற 21 வயது பெண் வீட்டில் இருந்தபடி ஆபிஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஃஸூம் கால் மீட்டிங்கில் இருந்த போது அவரின் 3 வயது குழந்தை துப்பாக்கியோடு வந்து தாயை சுட்டு இருக்கிறது.

துப்பாக்கி
துப்பாக்கியில் சேப்டி லாக் போடப்படவில்லை. அதுவும் சிறிய ரக துப்பாக்கி என்பதால் பெரிய அளவில் எடை இல்லாமல் இருந்துள்ளது. இந்த துப்பாக்கியை குழந்தையின் கைக்கு எட்டும் வகையில் அவரின் தந்தை அவேரி பேக் ஒன்றில் வைத்து இருந்துள்ளார். இதை விளையாட்டு பொருள் என்று நினைத்துக்கொண்டு குழந்தை விளையாடி உள்ளது. மீட்டிங்கில் இருந்த தாயும் அதை கவனிக்கவில்லை. அப்போதுதான் துப்பாக்கியை வைத்து தவறுதலாக தாயை குழந்தை சுட்டுள்ளது.

ஃஸூம் கால்
இதை ஃஸூம் கால் மீட்டிங்கில் இருந்த சக ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சக ஊழியர் ஒருவர் மீட்டிங்கில் குழந்தை ஒன்றால் சுடப்பட்டதை பார்த்து ஊழியர்கள் கலங்கிப் போனார்கள். குழந்தையின் கையில் துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து உடனே 911க்கு கால் செய்து ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர்.

என்ன நடந்தது?
குழந்தையின் கையில் எட்டும் வகையில் சேப்டி லாக் போடாமல் இந்த துப்பாக்கி இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் ஆகும். சட்டப்படி இது தந்தையின் குற்றம் . துப்பாக்கி அவரின் பெயரில் வாங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த குழந்தையின் தந்தை அவேரி கைது செய்யப்பட்டார்.

குழந்தை
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரும் முன்பே அந்த பெண் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த குழந்தை தற்போது தற்காலிமாக மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கிறது. 3 வயது குழந்தை ஒன்று தனது தாயையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications