நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும் தவறு.. கொரோனாவால் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. தொடங்கியது புதிய சண்டை.. ஏன்?

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வைரஸால் தற்போது சீனா அமெரிக்கா இடையில் சண்டை வந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வைரஸால் தற்போது சீனா அமெரிக்கா இடையில் சண்டை வந்துள்ளது.

Recommended Video

    மருந்து யாருக்கு சொந்தம்... அமெரிக்கா- ஜெர்மனி இடையே மோதல்?

    உலகம் முழுக்க போர் உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஈகோ பிரச்சனை, தனிப்பட்ட நாட்டின் சர்வாதிகார பிரச்சனை, தீவிரவாதம் ஆகியவை போர்களை உருவாக்கி உள்ளது. 2000 ஆண்டு தொடக்கத்தில் பொருளாதார சண்டை போரை உருவாக்கும் கருவியானது.

    தற்போதும் பொருளாதார சண்டைதான் போருக்கு காரணமாக இருக்கிறது. அதற்கு ஏற்றபடி உலகின் இரண்டு வல்லரசு நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் பொருளாதார ரீதியாக கடுமையாக சண்டை போட்டு வந்தது. இரண்டு நாட்டிற்கும் இடையில் கடுமையான வர்த்தக போர் இருந்தது.

    வர்த்தக போர்

    வர்த்தக போர்

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த ஆண்டு தொடக்கம் வரை இந்த வர்த்தக போர் இருந்தது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் அதிக வரியும், சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கடுமையான வரியும் விதிக்கப்பட்டு வந்தது. இந்த சண்டை காரணமாக உலகம் முழுக்க சந்தை பெரிய அளவில் அடி வாங்கியது. அதன்பின் சீனா சமாதானம் செய்ய ஒப்புக்கொண்டது. அமெரிக்காவின் பொருட்களை அதிகமாக வாங்க சீனா முடிவு செய்தது.

    மீண்டும்

    மீண்டும்

    இதனால் இரண்டு நாட்டிலும் வரிகள் தளர்த்தப்பட்டு, அமெரிக்கா - சீனா இடையிலான சண்டை முடிந்தது. விக்ரமன் படம் போல சுபம் போட வேண்டிய நேரத்தில்தான் தற்போது அமெரிக்கா சீனா இடையில் புதிய சண்டை வந்துள்ளது. இந்த முறை வந்திருக்கும் சண்டைக்கு காரணம் கொரோனா வைரஸ்!.. ஆம் கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்கா சீனா இடையே சண்டை வந்துள்ளது. இதை தொடங்கி வைத்தது வேறு யாரும் இல்லை.. அதிபர் டொனால்ட் டிரம்ப்தான்.

    டிரம்ப் என்ன சொன்னார்

    டிரம்ப் என்ன சொன்னார்

    கொரோனா வைரஸ் வந்த சமயத்தில் இருந்தே டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சீனாவின் அலட்சியம்தான் இதற்கு காரணம் என்பது போல் டிரம்ப் கூறி வந்தார். எங்கள் நாட்டில் கொரோனா இல்லை என்றும் பெருமையாக குறிப்பிட்டார். ஆனால் அதன்பின் அமெரிக்காவிலும் கொரோனா வந்தது. இதனால் சீனாவை வெளிப்படையாக டிரம்ப் குற்றஞ்சாட்ட தொடங்கினார்.

    என்ன செய்தியாளர்கள்

    என்ன செய்தியாளர்கள்

    இதனால் அமெரிக்காவில் இருக்கும் சீன செய்தி நிறுவனங்கள் அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருந்தது. முதலில் டிரம்ப் இந்த வைரஸை அமெரிக்காவில் கட்டுப்படுத்தட்டும், அதன்பின் சீனாவை குறை சொல்லலாம் என்று டிரம்ப்பை இந்த செய்தி நிறுவனங்கள் விமர்சனம் செய்தது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப் சீனாவை சேர்ந்த 5 செய்தி நிறுவனங்களின் லைசன்ஸை பறித்தார். இதனால் அங்கு பணியாற்றும் சீன ஊழியர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதன்படி இந்த நிறுவனங்கள் எல்லாம் செய்தி நிறுவனங்கள் இல்லை. இவர்கள் சீன அரசின் பிரச்சார நிறுவனங்கள். அதனால் இதன் செய்தி லைசன்ஸை ரத்து செய்துள்ளோம். இதற்கு வெளிநாட்டு மிஷனரி என்ற அனுமதியை மட்டும் அளித்துள்ளோம். அங்கு இனி 3ல் ஒரு பணியாளர் மட்டுமே பணியாற்ற முடியும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமும் இதில் அடக்கம். இது சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது .

    சீனா செய்தது என்ன

    சீனா செய்தது என்ன

    இந்த நிலையில் இதற்கு பதிலடியாக சீனா தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களான, தி நியூயார்க் டைம்ஸ், தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அனைத்து அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பணியாளர்கள் எல்லோரின் செய்தியாளர் உரிமையும் அந்த நாடு பறித்துள்ளது. அவர்கள் தங்கள் பிரஸ் கார்டை இன்னும் 10 நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    சண்டை வந்தது

    சண்டை வந்தது

    இந்த செய்தியாளர்கள் சீனாவை சேர்ந்தவர்களாக இல்லாத பட்சத்தில், உடனே அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதை அமெரிக்கா கடுமையாக கண்டித்து உள்ளது. சீனா செய்த பெரும் தவறு இது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுதான் தற்போது அமெரிக்கா சீனா இடையே சண்டை நடக்க காரணம் ஆகும். இந்த சண்டை வேறு விஷயங்களில் விரைவில் எதிரொலிக்கும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே கொரோனா மருந்து தொடர்பாக அமெரிக்கா ஜெர்மனி சண்டை போட்டு வருவது குறிப்பிடதக்கது.

    English summary
    After the trade war now China and The USA fight over Coronavirus - Here is why.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X