மொத்த பேண்டமிக்கும் மாறலாம்.. அமெரிக்காவில் மான்களிடம் பரவும் கொரோனா.. ஏன் ஆபத்து தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் மான் வகைகளிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மொத்த பெருந்தொற்றும் மாறலாம் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. பல நாடுகளில் மனிதர்கள் மட்டுமின்றி சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளிடம் கூட கொரோனா பரவி வருகிறது. சென்னையில் கூட வண்டலூர் விலங்குகள் அருங்காட்சியகத்தில் சிங்கங்கள் கொரோனா பாதிப்பால் பலியானது.
ஆனால் விலங்குகளிடம் பரவும் இந்த கொரோனா அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மொத்தமாக ஒரு விலங்குகளின் இன குழு இடையே அப்படியே கொரோனா பரவவில்லை.

ஆனால் மான்
ஆனால் முதல்முறையாக அமெரிக்காவில் மான்கள் இடையே எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பரவி வருகிறது. அங்கு உள்ள வெள்ளை வால் கொண்ட மான்கள் இடையே கொரோனா கேஸ்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதமே கொரோனா கேஸ்கள் மான்களை தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மான்கள்
மான்களின் உடலில் இருக்கும் செல்கள் கொரோனா எளிதாக தாக்குவதற்கான வாய்ப்பு கொண்டதாக உள்ளது. கொரோனா எளிதில் மான்களின் உடலில் பெருக்கம் அடையலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதை போலவே தற்போது அமெரிக்காவில் மான்கள் இடையே கொரோனா கேஸ்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 40 சதவிகித வெள்ளை வால் மான்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா
அதேபோல் அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதிகளில் 30 சதவிகித மான்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டிபிடிக்கப்பட்டள்ளது. ஐயோவா பகுதியில் மட்டும் கொரோனா காரணமாக 80 சதவிகித வெள்ளை மான்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் மான்கள் இடையே கொரோனா பரவுவது உறுதியாகி உள்ளது.
Recommended Video

சிக்கல் என்ன
இதில் என்ன சிக்கல் என்றால் பொதுவாக விலங்குகள்தான் வைரஸ்களின் வங்கிகள் போல செயல்படும். வௌவால்கள் எப்படி பல லட்சம் வைரஸ்களை பரப்புகிறதோ அது போல. ஒரு மனிதர்களிடம் ஒரு வைரஸ் பரவி முற்றிலுமாக கட்டுப்படுத்த பின் மீண்டும் விலங்கிடம் இருந்து அதே வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அதாவது மீண்டும் புதிய அலைகளை விலங்குகள் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

உருமாற்றம்
அதேபோல் விலங்குகளிடம் பரவும் இந்த வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிக வீரியத்தோடு எதிர்காலத்தில் மீண்டும் புதிய அலைகள் ஏற்படலாம். உதாரணமாக கொரோனா வைரஸ் மான்களிடம் பரவி வரும் நிலையில் மனிதர்கள் எல்லோரும் வேக்சின் போட்டு கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் கூட எதிர்காலத்தில் மீண்டும் மான்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வரும் அபாயம் உள்ளது.

அபாயம்
அதிலும் உருமாறிய கொரோனா அதிக வீரியத்தோடு மான்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதாவது கொரோனா சேமித்து வைக்கும் கொள்கலன் போல மான்கள் செயல்படும். இது வரும் நாட்களில் மனிதர்கள் இடையே மீண்டும் கொரோனா அலைகள் ஏற்படும் அபாயம் ஏற்படுத்தும். கொரோனாவை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள மான்கள் உதவியாக இருக்கும்.

எச்சரிக்கை
அமெரிக்கா மருத்துவ வல்லுனர்கள் பலர் விடுத்துள்ள எச்சரிக்கையை மான்கள் இடையே பரவும் கொரோனா பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மொத்த பெருந்தொற்றையும் இது பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மனிதர்கள் வேக்சின் எடுத்து கொரோனாவை ஒழிக்கும் நிலையில் மீண்டும் புதிய அலைகள் ஏற்படுவதற்கு மான்கள் காரணமாக இருக்கலாம்.

வேறு விலங்குகள்
இதுவரை வேறு விலங்குகளில் இப்படி அதிகமாக கொரோனா பரவவில்லை. இது கவலை அளிக்கிறது. மான்களிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரவினால் இன்னும் சிக்கல் ஆகும். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத, அழிக்க முடியாத நிலை கூட ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications