பைலட்டே இல்லாமல்.. வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய "அமேசான்" ஜெப் பெஸோஸ்.. எப்படி நடந்தது?
நியூயார்ட்: ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் அதன் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இன்று முதல் ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டார். தனது முதல் ஸ்பேஸ் பயணத்தை 4 பேர் கொண்ட குழுவுடன் அவர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய ஜெப் "கவ் பாய்" ரக தொப்பி அணிந்து ஸ்டைலாக வந்தது பெரிய வரவேற்பை பெற்றது.
Recommended Video
அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் இருந்து ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் ஏவப்பட்டது. மாலை 6.42 மணிக்கு சரியாக இந்திய நேரப்படி ராக்கெட் ஏவப்பட்டது. முதல் 3 நிமிடத்திற்கு பின் இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மேக் 3 வேகத்தை எட்டி வேகமாக சென்றது.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் முன் பகுதியில் இருந்த கேப்ஸ்யூல் உள்ளே பெஸோஸ் குழு இருந்தது. பூமியில் இருந்து 90 கிமீ உயரத்தை எட்டிய பின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் உள்ளே இருந்த குழுவினர் புவி ஈர்ப்பு விசை குறைந்ததால் லேசாக மிதக்க தொடங்கினர்.

100 கிமீ வரை
கர்மன் லைன் எனப்படும் 100 கிமீ உயரம் வரை இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கேப்ஸ்யூலை சுமந்து சென்றது. அதன்பின் கேப்ஸ்யூல் வானத்தை நோக்கி தனியாக பறந்து சென்றது. இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கேப்ஸ்யூலில் இருந்து பிரிந்து, கேப்ஸ்யூலுக்கு டாட்டா காட்டிவிட்டு பூமியை நோக்கி பாதுகாப்பாக திரும்பி வந்து, மேற்கு டெக்ஸாஸில் ராக்கெட்ட ஏவப்பட்ட இடத்திற்கு அருகில் லேண்ட் ஆனது.

லேண்ட்
ஆம் இது ரீ யூசப்ல் ராக்கெட். வெட்டிக்கல் டேக் ஆப், லெண்டிங் வசதி கொண்டது. இந்த பயணம் முழுக்க ஆட்டோ பைலட் முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் முழுக்க முழுக்க ஆட்டோ பைலட் வசதியுடன் புரோகிராம் செய்யப்பட்டது. இதை இயக்க ஆட்கள் தேவை இல்லை. கேப்ஸ்யூல் உள்ளே இருந்த ஒரு பெண்ணை ( அவருக்கு வயது 82) தவிர வேறு யாருக்கும் விமானியாக இருந்த அனுபவம் கிடையாது. ஆனால் அவரும் இதற்கு முன் ராக்கெட்டில் சென்றது கிடையாது.

ராக்கெட்
இருப்பினும் எந்த அனுபவமும் இல்லாத குழுவை வைத்துக்கொண்டு ஜெப் பெஸோஸ் விண்ணுக்கு சென்று திரும்பி வந்துள்ளார். ஸ்பேஸ் பயணத்தை சாதாரண மக்களும் மேற்கொள்ளலாம் என்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ராக்கெட்டை ஓட்டும் பைலட் இல்லாமலே இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் 100 கிமீ தூரம் வரை சென்று கேப்ஸ்யூலை வானத்தில் விட்டுவிட்டு அதன்பின் யு டர்ன் அடித்தது.

சிறப்பு
வானத்தில் 100 கிமீ உயரத்தில் பிரிந்து சென்ற கேப்ஸ்யூல் மேலும் சில கிலோ மீட்டர்கள் சென்று அப்படியே வானத்தில் மிதந்தது. உள்ளே இருந்த குழு புவி ஈர்ப்பு விசை குறைவாக இருந்ததால் மிதந்தனர். மொத்தம் 3 முதல் 4 நிமிடங்கள் இவர்கள் உள்ளே மிதந்தனர்.

திரும்பினார்கள்
அதன்பின் சிறிய ரக பூஸ்டர்கள் மூலம் இந்த கேப்ஸ்யூல் திசை லேசாக மாற்றப்பட்டு மீண்டும் பூமி நோக்கி வந்தது. பூமியை நெருங்கிய பின் 27 கிமீ உயரம் இருக்கும் போது இதன் பாராசூட் இயக்கப்பட்டது. கடைசி நான்கு நிமிடத்தில் மெதுவாக இந்த கேப்ஸ்யூல் திரும்பி வந்தது. பாராசூட் உதவியுடன் மிக பாதுகாப்பாக இந்த கேப்ஸ்யூல் தரையிறங்கியது.

பாராசூட்
உள்ளே இருந்த ஜெப் பெஸோஸ் குழு பாதுகாப்பாக தரையிறங்கினார்கள். ஜெப் பெஸோசுடன் 82 வயது நிரம்பிய முன்னாள் பெண் விமானியான வாலி பங்க் விண்ணுக்கு சென்றார். ஜெப்பின் சகோதரர் மார்க்கும் இதில் விண்ணுக்கு சென்றார். அதேபோல் ஆலிவர் தியாமென் என்று 18 வயது இளம் நபரும் இதில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications